பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் 夏亨夏 ஆனலும்கூட, ஆண்ட்ரோ தொழுவிலிருந்து கையில் சங்கிலி களோடு வெளியே வந்தபோது, அவள் நின்றுகொண்டுதானிருந் தாள். அவளது ஆடை வேர்த்து நனைந்த முதுகோடு ஒட்டி யிருந்தது. அவள் மார்பு தட்டையாக இருந்தது; பின்புறம் எடுப்பாக இல்லை. ஆண்கள் அணியும் காலணிகளை அவள் அணிந் திருந்தாள். அவன் எப்போதும் தன்னல் இயன்ற அளவு அவளுக்கு உதவி புரிந்தான். பாசிலின் மரணம்பற்றி அவளுக்குச் சொன்னவர்களில் அவன் ஒருவன் அல்லன். அவளுக்கு ஒரு குதிரை தேவைப்பட்டால் அவன் தருவான். எனினும், மரியம் உலர்ந்துபோய், ஒரு பலகைபோல் தட்டையாக இருந்த மரியமே தான. மரியம் கொஞ்சம் தண்ணிர் குடித்தாள். மீதியை, 'போ, என்னைப் பார்த்துச் சிரி' என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்தில் வீசி அடித்தாள். உடலோடு ஒட்டிய ஆடையை இழுத்துவிட்டாள். பிறகு, சட்டைக் கையால் தன் தோளேத் துடைத்தாள். 'நகர்வதுக்குக்கூட சோம்பலாக இருக்கிறது. தான் கொஞ்சம் குளிர்ந்து போனேன்’’ என்ருள். வண்டியில் உட்கார்ந்தாள். - 'எழுந்திரு. நீ அதை முறித்துவிடுவாய்' என்று ஆண்ட்ரோ கத்தி, கைகளை உயரே வீசினன். நான் இன்று கண்டதை நீ நம்பமாட்டாய். ஆற்றில் ஒரு.வெள்ளை எருமையைப் பார்த்தேன். நல்லது, நீ உதவி புரிய விரும்புவதால், அங்கே இருக்கிற அந்தக் கடப்பாறையை எடுத்துக்கொள். இடுக்கியைக்கூட. என்ன விஷயம்; நீ குருடா? அதோ சுவர் அருகே பார்.’’ சங்கிலிகளில் ஒன்றை அவன் கடப்பாறையில் சுற்றினன். 'கயிறு எடு. தொழுவில் பார். கனமானது வேண்டும், முட்டாளே. ஆமாம். எருமை எப்படி இருந்தது என்று நீ கற்பனை பண்ணவும் இயலாது! சீராக வெட்டக்கூடிய ஒருவன் அதிலிருந்து பத்து மரியம் செய்ய முடியும். பிறகும் ஒரு ஆஷ்கென் செய்வதற்குப் போதுமான அளவு மீதம் இருக்கும்.’’ 'நீ உண்மையாகவே நல்ல பார்வை பெற்றிருக்கிருய், இல்லையா?” "ஆ, என் பெண்னே...' பிறகு மரியம் சொன்னாள் : ஆகவே நீ உன் சொந்தப் பெண்களே மறந்துவிட்டு, எருமைகளைப் பார் ப் ப த ற்கு ப் போகிருய்.” - ஆண்ட்ரோ குழப்பமும் வருத்தமும் அடைந்தான். இதோ மரியம் இருந்தாள். ஒரு மகளுக்குக் கல்யாணம் பண்ணிவிட்டாள்.