பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. சிமோனியன் (1936) கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும் (அலிஸியா கிராகோஸியனுக்குச் சமர்ப்பணம்) நெர்ஸஸ் மாஷனுக்கு முன்னல் பசுமையான மதுரம் மிக்க புல்வெளி பரந்து கிடந்தது. அங்கே சில குடிசைகள், பொம்மைகள்போல், ஒன்றை விட்டு ஒன்று தூர விலகிச் சிதறி யிருந்தன. எப்போதும்போல, இந்தக் காலை நேரத்திலும், உலகம் ஒளி ஊடுருவிச் செல்லும் மெல்லிய போர்வையால் அமைதியாக மூடுண்டதுபோல் தோன்றியது. அந்த அமைதி சில குரல்களின் ஒத்திசைவாக இருந்தது. நமது சித்தத்தை நாம் சிறிது வருத்தினுல், கவலையை உண்டாக்கும் நம் எண்ணங்களை நாம் அரை இருளுக்குள் ஆழ்த்தி விட்டால், ஆச்சர்யப்படுத்துகிற அமைதியின் ஆசையூட்டும் சலசலப்புகளை நாம் கட்டாயம் கேட்போம். அட கடவுளே! வருத்தப்படுவதற்கு இனியும் சித்தம் எஞ்சியிராவிட்டால், கிளர்ச்சியுற்ற நமது மூளையிலிருந்து நம் எண்ணங்கள் தங்களை விடுவித்துக்கொள்ள விரும்பாவிடில், உள்ளார்ந்த கவலை தொடர்ந்து உக்கிரமானல்? யாருக்கு வேண்டும் இந்த மதுரமான பசும் புல்வெளியும், இந்த வீடுகளும், இந்த அமைதியும்? சந்தேகங்களை நீக்குவதற்கும் ஆசைகளைக் கொல்லவும் இவற்றை எவர் அமைத்தார்? என்று ஒருவரும் அறியார். தொலைதூரத்தில் விடப்பட்டுள்ள என் மூதாதையர் நிலத்துக்கான ஏக்கத்தினால் கஷ்டப்பட நான் விரும்பினல்? எனது கிளைபடர்ந்த வில்லோ மரத்துக்கும் அசைந்தாடும் நாணலுக்கும் நான் ஆசைப்பட்டால்?-இவ்வாறு நெர்ஸஸ் மாஷன் நினைத்தான். புல்வெளியின் ஒரத்தில் இருந்த வீடு சொன்னது: "பார்த் தாயா, என்ன விசித்திரமான ஆசைகள் எல்லாம் பிறக்கின்றன?