பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. சிமோனியன் | 85 இருக்கிருேம். நாங்கள் நால்வர்தான், அதனுல் என்ன? நாங்கள் எத்தனை பேர் இருக்கிருேம் என்பதில் என்ன வந்துவிடப் போகிறது? அல்லது மற்றவர்கள் யார் என்பதில்? ஷாவாஸ்ப், ஆர்னக் அல்லது மோரிக்...? நான் நெர்ஸஸ் மாஷன். நான் இங்கே வந்ததிலிருந்து ஒரு ஆசை என்னுள் பிடிவாதமாக முளையிட்டு வந்திருக்கிறது. அது பசிய குருத்தாகத் தலைதுாக்கியது. நான் மட்டுமே தனித்திருக்க வேண்டும் என்ற என் ஆசை இப்போது வெடிப்புகள் விழுந்த கனத்த பட்டையுடைய மரமாக வளர்ந்திருக்கிறது. நீ வெகுநேரம் ஷவரின்கீழ் நிற்கப்போகிருயா?” எங்கிருந்து வந்தாள் என்று யாருக்கும் தெரியாத அந்தப் பெண்ணின் குரல் கேட்டது. அக் குரலை அமுக்குவதற்காக நெர்ஸஸ் மாஷன் தண்ணிர் விழுகிற வேகத்தை அதிகமாக்கினன். மெல்லிய நீரோட்டங்களின் சத்தம் அவனை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியதாகத் தோன்றியது. 'தொடர்ந்து உன் நாட்டையே எண்ணிக்கொண்டிருந்து நீ ஒரு நாள் புத்தி பேதலிக்கத்தான் போகிருய்’’ என்று, வீடு, சிந்தனையின் நுண்ணிய சாயலோடு குறிப்பிட்டது. அப்புறம் நீ என்ன லாபம் அடைவாய்? ஒன்றுமில்லை. என்னே நம்பு, நீ எதுவும் அடையமாட்டாய். கவலைகள், குழப்பங்கள், ஏக்கம் இவைகளிளுல்தான் நீ கஷ்டப்படுவாய்.” நீ என் ஆத்மாவை வதைக்கிருய் என்று நெர்ஸஸ் மாஷன் நினைத்தான். நான் எனது நாட்டை நினைக்காவிட்டால், நீ என்னை அமைதிப்படுத்துகிறவனுகவும் தேற்றுகிறவளுகவும் இருக்க முடியும் என்று நினைக்கிருயா? அவன் ஷவரின்கீழ் தலையை ஆட்டினன். குழாயைத் திருகி மூடினன். நீராவி படர்ந்த கண்ணுடியைப் பார்த்தான். உருவம் தெரியவில்லை! அதில் அவன் இல்லை! அவன் முகம் அங்கு இல்லை! அவன் பார்வைக்குப் புலகைவில்லை. மங்கலான உருவெளி வடிவம் மட்டுமே இருந்தது. நமக்குப் பிடித்த எவருடைய உருவத்தையும் நாம் சித்திரிக்கலாம். முடிவில் நம்மை நாமே பூர்த்தி செய்துகொள்வது நம். நம் சித்தத்தின் கட்டளை யைப் பொறுத்தது. ஹல்ம்...! தொளதொளத்த ஸ்நான உடையை அவன் அணிந்தான். அதன் அகன்ற கையினல் கண்ணுடிமேல் படிந்திருந்த ஆவியைத்