பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置&盛 கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும் தெரியாது-அந்த வீடுகூட யாருக்காவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டது. நீண்ட காலமாகவே நான் உணர்ந்துவந்திருக்கிறேன் என்று தெர்லஸ் மாஷன் கருதினன்: இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்க விரும்புகிறது என்பதை நான் வெகுகாலமாகவே கண்டு உணர்ந்திருக்கிறேன். ஏனென்ருல், அவளுக்கு வேறு யார் இருக்கிருர்கள்? அவளுக்கு உறவினர் எவரேனும் இருக்கிரு.ர்களா? அவளுக்கு மூதாதையர் யாராவது உண்டா? வரலாறு ஏதாவது இருக்கிறதா? இந்தப் பக்தியை நான் பாராட்டுகிறேன். ஆனல் நான் என்ன செய்ய முடியும்-எனது கடைத்தேற்றம், என் சக்தி, என் வலிமை, மற்றும் இதுவும், இதுவரை நான் ஒரு கற்பனை மனிதனாக மாறிவிடாமல் இருப்பதும், என்னை நானே பாதுகாத்துப் பத்திரப்படுத்தியிருப்பதும், எல்லாமுமே எனது தொலைதுார நாட்டின் உண்மையான, திடமான நிலைபேற்றினல் நிர்ணயிக்கப்படுகிறபோது? 'குளித்துமுடி! நான் இரவுச் சாப்பாடு தயாரிப்பேன்’ என்று அந்தப் பெண் சொன்னுள். துவாலையை நேர்படுத்தினுள். சிதறிக்கிடந்த நெர்ஸஸ் மாஷனின் காலணிகள், காலுறைகள், சட்டை, கவலைகளை எல்லாம் சேகரித்துக்கொண்டு சமைய லறைக்குப் போளுள். நீ யார் என்று நீ சொல்லவில்லை; இது உண்மைதான் என்று நெர்லஸ் மாஷன், ஷவரின்கீழ் நின்றவாறு எண்ணினன். ஆனாலும் என் கவலைகளே ஒன்று திரட்டவும், எனது சந்தேகங் களை விலக்கவும், மேலும், ஹல்ம்... மேலும், இரவுச் சாப்பாடு தயாரிக்கவும் நீ வந்திருப்பதை நான் பார்க்கிறேன். 'நான் உங்கள் இருவரையும் தனியாக விடுகிறேன்’ என்று வீடு கூறியது. அவள் யார் என்று தெரிகிறதா? அவள் ஒரு மனைத்தலைவி. ஒரு பெண். ஒரு மர்மம்! அந்த மர்மத்தை அறிந்துகொள்ளச் சம்மதித்தால், அநேக தலைமுறைகள் தூரத் தொலே நாட்டின் மீது கொண்ட ஏக்கத்தினால் இனிமேல் துயரப் படமாட்டார்கள். நான் உங்கள் இருவரையும் தனித்திருக்க விடுவேன். உங்களைத் தொந்தரவு பண்ணமாட்டேன்’ என்று வீடு தொடர்ந்தது. 'நீ மறதியில் ஆழ்ந்துவிடுவாய். மறதியோடு அளவற்ற ஆனந்தம் வந்து சேரும்.’’ என்ன முன்யோசனை! எனினும், இன்று மாலை நான் தனி யாக இருப்பேன், எல்லா விருந்தாளிகளையும் அகற்றிவிடுவேன் என்று நான் உறுதியாக நம்பினேன். எல்லா...? ஆளுல் நாங்கள் மொத்தம் நான்கே பேர்கள்தான் புல்வெளியில்