பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் மூஷேக் கால்ஷோயன் (1933– } கால்ஷோயன் காட்ரானூர் எனும் ஆர்மேனிய கிராமத்தில் பிறந்தார். ஏரெவான் விவசாயக் கழகத்திலும், பிறகு மாஸ் கோவில் உயர்தர இலக்கிய வகுப்புகளிலும் கற்றுத் தேர்ந்தார். முக்கியப் படைப்புகள் : "த்ளோரி மீரோ (கதை); கற்கள் புஷ்பிக்கின்றன’’ (கட்டுரைகள்) மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு: தி க்ருவி பிள்' (உலோகங்களை உருக்குவதற்கான மண் பாத்திரம்) நாவல். ஹ்ரான்ட் மாடவோசியன் (1933– J மாடவோசியன் ஆர்மேனியாவில் அஹ்னித்ஸார் கிராமத்தில் பிறந்தார். அவர் 1982-ல், எச். அபய்யன் பெயரால் நிறுவப்பட்டுள்ள ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில் வரலாறும் மொழி இயலும் கற்றுத் தேர்ந்தார். 1987-ல் மாஸ்கோவில் திரைக்கதை வசனம் எழுதும் உயர்தரப் பயிற்சியை முடித்தார். முக்கியப் படைப்புகள் : 'நாமும் நமது மலைகளும்’ என்ற கதை, 'ஆகஸ்ட்', 'மரங்கள்', 'ஒட்டம்’ ஆகிய மூன்று சிறு கதைத் தொகுப்புகள். - r - 'ஆர்மென் பிலிம்’ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட "நாமும் நமது மலைகளும்', 'இலையுதிர்காலக் கதிரவன்' என்ற திரைப்படங்களுக்கு ஹ்ரான்ட் மாடவோசியன் கதை வசனம் எழுதியிருக்கிரு.ர்.