பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 என் நண்பன் நெலோ செய்ததுபோலவே, என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினர்கள், படிப்புச் செலவு வருஷத்துக்கு மூன்று ரூபிள்கள். தல்ைதான் சம்பளம் கட்ட முடியாத பெற்ருேர்களின் பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்படவில்லை. என் நண்பர்களில் ரொம்பப் பேர்-அவர்களில் நெஸோவும் ஒருவன்-பள்ளிக்கூடம் போக முடியவில்லை. - நாங்கள் எங்கள் வாழ்விலேயே முதல் முறையாகப் பிரித்து வைக்கப்பட்டோம். பள்ளிக்கூடமும் வாத்தியாரும்தான் எங்களை அப்படிப் பிரித்துவைத்த சக்திகள். இப்போதுதான் எங்களில் சிலர் அதிக வசதி படைத்தவர்கள் என்றும், மற்றவர்கள் ஏழைகள் என்றும் நாங்கள் முதல் தடவையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. நெஸோ புழுதியில் புரண்டவாறே நானும் பள்ளிக்கூடம் போக விரும்புகிறேன்’ என்று அழுது புலம்பியது இப்பவும் என் செவிகளில் ஒலிக்கிறது. அதட்டிக் கூப்பாடு போட்ட அவனுடைய தந்தையின் குரலையும் நான் இன்னும் கேட்க முடிகிறது. அட கடவுளே! ஏன்டா இது உனக்கு விளங்கவில்லை? என்னிடம் பணம் இல்லையே. என்னிடம் மூன்று ரூபிள்கள் இருந்தால், அதைக் கொண்டு நான் தானியம் வாங்கி, நீ பட்டினி கிடக்காதபடி காப்பாற்றுவேனே. என்னிடம் பணமே இல்லை' என்று அவர் சொன்னர். பள்ளிக்கூடத்தில் சேராத நெலோவும் என் இதர நண்பர் களும் கும்பலாக வந்து, வாசல் முன் கூடி நின்று, உள்ளே இருக்கும் எங்களை எட்டி எட்டிப் பார்ப்பார்கள். ஆளுல் வாத்தியார் அவர்களை உள்ளே விடமாட்டார். அப்பால் விரட்டுவார். இடைவேளையின்போது சேர்ந்து விளையாடு வதற்குக்கூட அவர் எங்களை அனுமதிக்க மாட்டார். பள்ளிப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதற்கு வெளிப் பிள்ளை களுக்குத் தகுதி கிடையாது என்று அவர் சொன்னர். என் நண்பர்கள் வெளியே போய் உட்கார்ந்திருப்பார்கள்; பள்ளி, முடிந்து நாங்கள் வெளியேறும்வரை காத்திருப்பார்கள். பிறகு நாங்கள் அனைவரும் ஒன்ருக வீடு திரும்புவோம். மெதுமெதுவாக, முதல் வருடம் பள்ளிக்கூடத்தில் எனக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். வருஷ முடிவில், பள்ளிக் கூடத்தில் சேர்ந்திராத நெஸோவும் என் இதர நண்பர்களும் வெளியில் எனக்காகக் காத்திருப்பதை விட்டுவிட்டார்கள். -