பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹோவன்னஸ் டுமேனியன் 器 வழியில் உணவு உண்பதற்காக நாங்கள் நின்ருேம். முலாம் பழத்தை நறுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதும், நான் எனது சின்னக் கத்தியை நெஸோவிடம் கொடுத்தேன். பிறகு, நாங்கள் மறுபடியும் புறப்படத் தயாரானதும், கத்தி மறைந்துபோனதை நான் கவனித்தேன். அதை அவன் திருப்பித் தந்துவிட்ட தாகவும், நான் கத்தியைப் பைக்குள் போட்டுக்கொண்டதாகவும் நெஸோ சத்தியம் செய்தான். உண்மையில் அதை அவன் திருப்பித் தரவில்லை என்று நான் நிச்சயமாக அறிவேன் ஆயினும், என் சட்டைப் பைகளே முழுக்கச் சோதித்தேன். இறுதியில், நாங்கள் கிளம்பிளுேம். அவன் அந்தக் கத்தியைத் தனக்காக வைத்துக்கொண்டான் என்பது திட்டமாகப் புரிந்தது. பின்னர், மற்றவர்கள் அதை அவனிடம் கண்டதும் உண்டு. எங்கள் வழியை நாங்கள் தொடர்ந்தபோது, என் இதயம் வலித்தது. நிச்சயமாக அது எனது மறைந்துபோன கத்திக்காக அல்ல; ஆனல் நான் அனுபவித்த அதைவிடப் பெரிய இழப்புக்காக: எதை என் நண்பன் அறிந்துகொள்ளவில்லையோ அதற்காகத்தான் அந்த வேதனை. நாங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைந்ததும், நெலோ திரும்பவேண்டிய நேரத்தில், குதிரைக்கு உரிய வாடகைப் பணம் போக, அவனுக்காக ஒரு சட்டைக்குத் தேவையான துணி ஒன்றும் வாங்கி அளித்தேன். அதைப் பெற்றுக்கொண்டதும், ' என்ன, நீ எனக்கு இனம் காசு எதுவும் தரமாட்டாயா?’’ என்று அவன் கேட்டான். நான் மிகுந்த குழப்பம் அடைந்தேன். அவனுக்குப் பணம் கொடுத்தேன். ஆலுைம், அதுமுதல், எனது குழந்தைப் பருவத்தையும், நாங்கள் மரக்கட்டைகள் மீது உட்கார்ந்திருக்க நெஸோ கதைகள் சொல்லி மகிழ்வித்த நிலா இரவுகளையும் நான் நினைத்துக்கொள்கிற ஒவ்வொரு தடவையும், என் இதயம் வேதனையாலும் இரக்கத்தாலும் கனத்துவிடும். 'நெஸோ ஏழை... நெஸோ கல்வி அறிவில்லாதவன்... கிராம வாழ்வின் பயங்கர வறுமையினல் நசுக்கப்பட்டவன் நெஸோ... அவன் கல்வி கற்றிருந்தால், அவன் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு, போதுமான வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால், என்னைவிட மிகச் சிறந்த மனிதனுக அவன் விளங்கியிருக்க முடியும்.’’ e. இப்போது நெஸோபற்றி நான் நினைக்கிறபோது அவனை மன்னித்து, என் நோக்கில் அவனை உயர்ந்தவளுகக் காணவும், என் சிறு பிராயத்தில் முன்பு நான் அவனை நேசித்ததுபோல்