பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. தெமிர்ச்யன் (1877–1956) வயிறு வீட்டிலிருந்து சதுக்கத்துக்கு; சதுக்கத்திலிருந்து வீட்டுக்கு. காலை முதல் மாலை வரை அவன் கண்காணிக்கிற எல்லே அது தான். முன்னர், அவன் தச்சுவேலைக்காரணுக இருந்தபோது கூட, நகரத்தில் அவன் போவதற்கு விசேஷமான இடங்கள் எதுவும் இருந்ததில்லை. ஆயினும், சனிக்கிழமை மாலை வேளை களில் வீட்டுக்கு வந்ததும், அவன் நேரே மதுச்சாவடியை நோக்கி நடைபோடுவான். ஆளுல் இப்போது யுத்தமும், பஞ்சமும், இன்னும் இதர பல விஷயங்களும் சேர்ந்து அவனையும் அடியோடு அமுக்கிவிட்ட காலத்தில், அவனுக்குப் போக்கிடமே இல்லை என்ருகிவிட்டது. அவன் வேலை செய்யவில்லை. ஏற்கெனவே கிழடாகிவிட்டான். முற்றிலும் ஒய்ந்துபோனன். தரித்திரம் பிடித்த கிராமம் ஒன்றில் தீனிக்கு வழியின்றிக் கிடக்கும் ஒரு நாய்க்கு - எவரையும் பயப்படுத்தாமலும், தான் இருப்பதை எவருக்கும் உணர்த்த முடியாமலும் வெறுமனே கம்மிய குரலில் குரைத்துக்கொண்டிருக்கிற அப்பாவி ஜந்துவுக்கு - இருக்கிற முக்கியத்துவம்தான் அவனுக்கும் இருந்தது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு தச்சன் அவன். அவ்வளவு தான். - - கடைசியாக அவனை வேலைக்கு வைத்திருந்த ஆசாமி அவனைச் சக்கையாக முற்றிலும் பிழிந்தெடுத்த பிறகு வீட்டுக்கு அனுப் பினன். அவனது சவப்பெட்டிக்கும் புதைகுழிக்கும் அவனை அனுப்பிவிட்டான் என்றே சொல்லவேண்டும். நாற்பது வருஷங்கள் உழைத்தும் அவன் எதுவும் மீத்திருக்க வில்லை. உடல் பலமோ, பணமோ, நண்பர்கள் என்று எவருமோ அவனுக்கில்லை. அனல் பறக்கப் பாய்ந்து ஒடும் குதிரைகள் பூட்டிய வண்டி மாதிரி அனைத்தும் அவனை விட்டுப் பறந்தோடின. தணிக்க முடியாத பசி ஒன்றுதான், நன்றியுள்ள நாய் மாதிரி, கடந்த காலத்தின் எச்சமாக அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முன்னுள் கைவினைஞனின் ஆரோக்கியமான வயிறு பிடிவாதமாக இயங்கியது.