பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்டீபன் ஸோரியன்

27

அன்புள்ள கீழ்மையான முகம் உடையவன். குட்டையான, நரைத்த முடி அடர்ந்த அவன் தலையும் முகமும் முள்ளம்பன்றியின் தோற்றத்தை நினைவுபடுத்தின. இளைஞனைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று அவன் கேட்டான்.

இளைஞன் கிண்ண்த்தின் மூடியை அப்படியும் இப்படியும் திருப்பிக்கொண்டே, "நான். நான் வந்து...” என்று இழுத்தான்.

பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்து பொறுமையற்ற கண்களால் தன்னைக் கவனித்த மனிதனின் முன்னே அவன் குழம்பித் தவித்தான்.

சர்க்கரைக் கிண்ணத்தைச் சுழற்றியவாறே அவன் தொடர்ந் தான் : "நான் வந்து..."

கடைக்காரன் அமைதியில்லாமல் அசைந்தான். இளைஞன் சர்க்கரைக் கிண்ணத்தையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்து, "நல்லது. நீ ஒரு சர்க்கரைக் கிண்ணம் வாங்க விரும்புகிறாய் இல்லையா? அது ஒரு ரூபிள் விலை ஆகும்" என்றான் .

"இவன் தன்னைக் கண்டுகொள்ளவில்லை" என்று இளைஞன் நினைத்தான். தான் யார் என்று அறிவிக்க விரும்பினான்.

"பாருங்கள். நான் கேச்சன் மாமா மகன்" என்றான், வெட்கி முகம் சிவந்தான், மடத்தனமாக உளறிவிட்டோமே என்று நினைத்தான். இதைச் சொல்லத் தேவையேயில்லை,

"கேச்சன் மாமா மகனா! நம்ம கேச்சன் மாமாவின் மகனா?’’ என்று கடைக்காரன் வியப்போடு கத்தினான்.

"ஆமாம்”. இளைஞன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் நல்ல படியாகத்தான் பேச்சைத் துவக்கியிருக்கிறான் என்று தோன்றியது. இப்போது ஏபெல் அவனைக் கேள்விகள் கேட்கலாம்...

"நல்லது. நீ வந்து நம்ம கேச்சன் மாமா மகனானால், விலையைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்" என்று கடைக்காரன் தொடர்ந்தான். "தொண்ணுாறு கோப்பெக் கொடு. அதை எடுத்துக்கொள். அது அருமையானது. அதை வாங்கியதுக் காக நீ வருத்தப்பட நேராது.”

இளைஞன் மவுனமாக நின்றான். தான் தொடங்கியதை மேற்கொண்டு தொடர்வது எப்படி என்று சிந்தித்தான். ஏபெல் தன்னைக் கேள்விகள் கேட்கவேண்டும் என்றே அவன் ஆசைப் பட்டான். ஆனால் ஏபெல் பேசவேயில்லை. கைகளை அகட்டி