பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனன்யன் 葛惠 பார்வையில் படாதவாறு இப்போது நான் அதை மூடி வைத் திருப்பதுபோல் அப்போது மறைத்திருக்கவில்லை. அக்காலத்தில் நான் இவ்வளவு துயரத்தோடும் வாடித் தளர்ந்தும் இருக்க வில்லை. நானும் உங்களைப்போல் இளமையோடும் அழகாகவும் இருந்தேன். தோளில் துப்பாக்கியைச் சுமந்துகொண்டு பெரிய மாசிஸ் மலைமுகட்டின் சரிவுகளில் வேட்டையாடப் போனேன். வேட்டைதான் உற்சாகமற்ற என் வாழ்க்கையின் ஒரே சந்தோஷமாக இருந்தது. அதே வேட்டைதான் என் முகம் இப்படிப் பயங்கரமாக உருமாறிப்போனதற்கும் காரணமாக இருந்தது.' அந்த வீட்டுக்காரன் நெட்டைச் சுலைமான் தன் முகத்தை மூடியிருந்த துண்டை அகற்றினன். எங்கள் ரோமம் குத்திட்டு நின்றது. அவனுக்கு வலது கன்னமே இல்லை. நெற்றிக்கும் கீழ்த்தாடைக்குமிடையில் ஒரு பெரிய துளை இருந்தது. அதன் வழியே வெள்ளெலும்புகள் கோரமாகத் துருத்திக்கொண்டிருந்தன. ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பயங்கரமான கறுப்புக்குழி ஒன்று இருந்தது. அந்த மனிதனது தலையின் வலப்புறம் சுமார் இருபது வருஷ காலமாக மக்கி மடிந்திருக்கும் என்று தோன்றியது. எலும்புகளிலிருந்து சதை அழுகி உதிர்ந்துவிட்டது. இடது பக்கம், இன்னும் உயிரோடிருந்தபோதிலும், சாவின் அருகாமையில் பயந்து கலங்கி, நிலையான அச்சத்தின் சாயலைத் தாங்கியிருந்தது. அவன் கதை மர்மம் நிறைந்தது எனத் தோன்றியது. அதை அறிய நான் ஆவலோடு தவித்தேன். சுலைமான் மறுபடியும் தன் தலையை மூடி மறைத்துக்கொண்டு பேசினன்: ' இது எப்படி ஏற்பட்டது, இயற்கை ஏன் என்னை இவ்வளவு கொடுரமாகத் தண்டித்தது என்று இப்போது நான் உங்களுக்குச் சொல்வேன். ஒரு சமயம் பனிக்காலத்தின்போது, நான் துப்பாக்கியும் கையுமாய், ஒரு நரியை வழிமறிப்பதற்காக, மாசிஸ் மலை அடிவாரத்தில் உலர்ந்த புல்களினூடே ஓடிக்கொண்டிருந்தேன். என் பார்வை நரிமீதே பதிந்திருந்தது. என் காலின் கீழே என்ன இருந்தது என்றே நான் கவனிக்கவில்லை. குறுகி ஆழமாக இருந்த ஒரு குழியின் அடிமட்டத்தில் போய் விழுந்த பிறகுதான் நான் அதைக் காணமுடிந்தது. அது ஒரு கிணறு மாதிரியே இருந்தது. எனக்கு மேலே உயரத்தில், குழியின் வாய்க்கு மேலாக வளர்ந்து தொங்கிய செடிகளினூடு, நீலவானத்தின் ஒரு துணுக்கை நான் பார்க்க முடிந்தது.