பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

综2 துரோகி சந்நியாசிகளில் ஒருவன் பெர்சியப் பட்டுச் சமுக்காளம் ஒன்றைக் குழிக்குள் தொங்கவிட்டான். சூரிய ஒளியில் ஆயிரம் வர்ணங்களில் அது சுடர்வீசி தகதகத்தது. பாம்பு அந்தச் சமுக்காளத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுத் திகைத்தது. நான் புதர்களிலிருந்து எட்டிப் பார்த்தேன். மன்னர் என் சொந்தத் தம்பியையே இராணுவத்திற்காக இழுத்துச் செல்வது போன்ற உணர்வினல் என் இதயம் வேதனையோடு துடித்தது. சந்நியாசி, மென்மையான இனிய குரலில், தாலாட்டும் அரபுப் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினன். ஒரு பறையில் லேசாகத் தாளம் கொட்டினன். மணிகள் கிண்கிணிக்கும்படி அதை ஆட்டினன். பாம்பு தன் சுருள்களுக்கு மேலாகத் தலையை உயர்த்தி, ஆச்சர்யத்தோடு நோக்கியது. ஆயினும், அந்த இசைக்கு அதை அமைதிப்படுத்தும் ஒரு சக்தி இருந்ததை நான் கவனித்தேன். சந்நியாசி தன் சட்டைப் பையிலிருந்து பிரகாசமான ஒரு பொருளை எடுத்து பாம்பின் முன்னே காட்டினன். அதே வேளையில் குழலில் ஒரு இனிய ராகத்தை இசைக்கலானன். ஒ, இன்னிசையின் சக்திதான் என்ன! இன்னிசை எவரையும் பைத்தியமாக்கிவிடும். உலகத்தின் மிக உயர்ந்த அழகியைக்கூட ரத்த வெறிபிடித்த ஒரு ஓநாயாக, அல்லது கொடிய பாம்பாக, அது மாற்றிவிடும். இசைக்கு இணங்கி அந்தப் பாம்பு பல வர்ணச் சமுக்காளத் தின்மீதேறி மேலே வந்து, பாட்டுப் பாடிய சந்நியாசியின் மடியில் தலைவைத்துக் கிடந்தது. இப்படியாக அந்தப் பாம்பு ஏமாற்றப்பட்டு, ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருப்பதற்காக நான் சிறிது தூரம் விலகிச் சென்றேன். நான் ஒரு இழிந்த செயலைச் செய்துவிட்டேன். எனக்காக நானே வெட்கினேன். பாம்பு பத்திரமாகக் கூண்டில் அடையுண்டு, கூண்டின் மூடி இறுகச் சாத்தப்பட்டதும், சந்நியாசி என்னிடம் வந்து, பேசிய பணத்தை எனக்குத் தந்தான். சுலைமான், என் நண்பனே! நீ இதை நல்ல முறையில் பயன்படுத்துவாய் என்று நம்புகிறேன். நீ எனக்குப் பெரும் பொக்கிஷம் ஒன்றைக் கொடுத்திருக்கிருய்' என்ருன், அந்தப் பணம், நெருப்புபோல், என் உள்ளங்கையைச் சுட்டது.