பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெரோ கான்ஸ்ாடியன் (1915) வெள்ளை ஆட்டுக்குட்டி கிழத் தோட்டக்காரன் நவசார்த் குளித்து ஒய்வெடுப் பதற்காக முந்திரி மரத்தடியில் பொங்கிப் பெருகிய நீரூற்றுக்குப் போனன். வெயிலில் கருகிய தன் முகத்தின்மீது குளிர்ந்த நீர் படட்டும் என்று அவன் குனிந்தானே இல்லையோ, அவனது குழுத் தலைவன், "ஏ நவசார்த்! சீக்கிரம் வா! உன் மகன் அர்ஷாக் வந்திருக்கிருன்!” என்று அவனே அழைக்கும் குரலைக் கேட்டான். 'என்ன?’ என்று கிழவன் பரபரப்புடன் கத்தினன். பிறகு சிரமத்தோடு நிமிர்ந்தான். தனது வயதுக்கு மீறிய வேகத்துடன் அவன் அந்த ஆள் நின்ற இடத்துக்கு விரைவாகத் திரும்பினன். 'நீ என்ன சொன்னுய்? அவன் எப்போது வந்தான்? எங்கே இருக்கிருன்?’’ 'அவன் கிராமத்தில் இருக்கிருன். நானே அவனைப் பார்த்தேன். நீல வெஸ்டான் காரை அவன் ஊர் வழியாக ஒட்டிச் சென்ருன். நீ அதிர்ஷ்டசாலிதான் நவசார்த்; ஆண்டவன் உனக்கு ஒரு அருமையான மகனே அருள்புரிந்திருக்கிருர்!’’ சூரியன் முன்னைவிடப் பன்மடங்குப் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியது. நவசார்த் காற்றில் மிதப்பதுபோல் உணர்ந் தான். பரவசத்தினல் அவன் இதயம் துடித்தது. நவசார்த் ஊரின் பக்கமாகப் பார்த்தபோது எதையோ சிந்தித்ததாகத் தோன்றியது. ஆனல் உடனே அவன் வேகமாகத் திரும்பி மதுவடிக்கும் இடம் நோக்கி ஓடினன். அவன் பத்து வருஷங்களாக அர்ஷாக்கைப் பார்க்கவில்லை. ஒவ்வொரு வருஷமும் அவன் நம்பிக்கையோடு ரஸ்தாவை நோக்குவான்; காத்திருப்பான். அவன் பொறுமையோடு காத்திருந்தான். இப்போது, நெடுங்காலத்துக்குப் பிறகு, அவன் மகனைப் பார்ப்பான். அர்ஷாக் நல்ல சமயத்தில் வந்திருக்கிருன்: பழத்தோட்டங்களில் கனிவகைகள் நன்கு பழுத்துள்ளன. அவன் இன்னும் திடமாகவும் உற்சாகமாகவும் இருந்தான்.