பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ெரோ கான்ஸ்ாடியன் 67 மாஸ்கோவில் ரொம்பப் பெரிய வீட்டில் அவன் வசித்தான் என்பதையும் நவசார்த் தன் ஊர்க்காரர்களிடம் அடிக்கடி சொல்வான், கிழவன் கிராமத்தை அடைவதற்கு அவசரப்பட்டான். மது ஜாடியில் தெறித்தது. எளிமையான, பயந்த ஆட்டுக்குட்டி அவனைப் பின்தொடர்ந்தது. அவன் முடிவில் வீடு சேர்ந்தான். ஆளுல் அர்ஷாக்கின் காரை வெளியே காணவில்லை. அவன் ஏன் நேரே இங்கு ஒட்டி வரவில்லை?” என்று நவசார்த் ஆச்சர்யப்பட்டான். "ஆ, என்ன பேச்சு இது! இங்கே கற்கள் ரொம்பவும் கூர்மையாக இருக்கின்றன. டயர்கள் கெட்டுப்போகும் என்று அவன் பயந் திருப்பான். அவன் வீடு வரை காரை ஒட்டி வராததும் நல்லது தான்.” அவனது ஒற்றை மாடித் தட்டுக்கட்டு வீடு, ஒரு மெத்தையும் மண்தரையும் கொண்டு, கழுகின் கூடுபோல் மலைச்சரிவில் ஒட்டி யிருந்தது. அநேக வீடுகளில் அதுவும் ஒன்று. நவசார்த் முற்றத்தில் புகுந்து, ஜாடியையும் கூடையையும் தரையில் வைத்தான். ஆட்டிக்குட்டிக்கு ஒரு கைப் புல் வீசிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் வாழ்விலேயே முதல் முறையாக அந்த வீடு பரிதாபத்துக்கு உரியதாகவும் தளர்ந்து குன்றியும் காணப்பட்டது அவனுக்கு. 'நல்லது. இது அர்ஷாக்கின் வீடுதானே? இங்குதான் அவன் வளர்ந்தான். தன் சொந்த வீட்டைப் பார்த்து அவன் வெட்கப் படமாட்டான்' என்று அவன் தனக்கு ஆறுதலாகச் சொல்லிக் கொண்டான். முற்றத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினன்.

  • வாழ்த்துகள், நவசார்த். அர்ஷாக் வந்திருக்கிருனே.” பக்கத்து வீட்டுக் கிழவிதான் வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தபடி பேசினுள்.

நவசார்த் சந்தோஷப் பெருக்கிளுல் சிவந்தான். 'நன்றி. உன்னைப் பிரிந்து ஊர் சுற்றுகிறவனும் திரும்பிவந்து சேரட்டும்.’’ 'நான் அர்ஷாக்கைப் பார்த்தேன்.” அவன் இங்கே வந்தான?’’ * 'இல்லை. நான் ஊசிகள் வாங்கக் கடைக்குப் போனேன். பண்ணை அலுவலகத்தின் முன்னுல் அவன் நிற்பதைப் பார்த்தேன். எவ்வளவு நேர்த்தியான இளைஞனாக இருக்கிருன். அவன் ஒரு ராஜா மகன் இல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள்.