பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
பாஸ்கரத் தொண்டைமான்
 
9
கோலக்குமரன் திருஉருவம்


ஆறுமுகனுக்கு உகந்த படை வீடுகள் ஆறு என்பதை அறிவோம், இது தவிர எங்கே ஒரு மலை, ஒரு குன்றைக் கண்டாலும், அங்கே ஏறி நின்று விடுவான் அவன். தண்டேந்தித் தனியனாக நிற்பான்; இல்லை வள்ளி, தெய்வயானை சமேதனாக நல்ல கல்யாணகுண சம்பன்னனாக காட்சி தருவான். ஆறுமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு தேவ சேனாதிபதியாகவும் விளங்குவான். இப்படி எல்லாம் அவன் திருஉருவைச் சமைத்து வணங்கி வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழ் மக்கள் எவ்வளவோ காலமாக.

முருகனுக்கு உரிய முக்கிய ஸ்தலங்கள் அறுபத்தி நாலு என்பர் அறிஞர். ஆனால் அருணகிரியார் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்குச் சென்று ஆங்காங்கு உள்ள முருகன் பேரில் எல்லாம் திருப்புகழ் பாடி மகிழ்ந்திருக்கிறார். அத்தனை ஊர்களில் உள்ள மூர்த்திகளையும் இங்கே நான் கொண்டு வந்து நிறுத்தப் போவதில்லை. என்றாலும் ஒரு சில மூர்த்திகளையாவது கண் குளிரக்காணும்படி உங்களுக்கு காட்டும் வாய்ப்பு இருக்கிறதே எனக்கு, அதை விட்டுவிட விரும்பவில்லை நான்.

தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலியில் திருமலையில் இலஞ்சியில் இன்னும் எத்தனையோ தலங்களில் அழகான மூர்த்திகள் உண்டு. வடபாண்டி நாடாகிய மதுரையை அடுத்து திருப்பரங்குன்றத்தில், குன்றக்குடியில் எல்லாம் குமரன் அழகாக உருப் பெற்றிருக்கிறான். வட தொண்டை நாட்டிலோ, தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்தில் ‘வளர்ந்தவனே இன்று போரூரிலும், வடபழனியிலும் அன்பர்களுக்கு தரிசனம் தந்து