பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஆறு செல்வங்கள்

கேட்க முடியாத போது வாயால் பேசவே முடியாது எனக் கூறிவிடலாம்.

ஆகவே, கேள்விச் செல்வத்தைப் பெறு; அதையும் கேளாமற் கேட்டுப் பெறு. கேட்டுத்தான் பெறவேண்டும் என்ற நிலை வந்துவிட்டால் மெதுவாகக் கேள். அதையும் கற்றறிந்த மக்களிடம் மட்டுமே கேள். அதிலும் ஒழுக்க முடையவர்களிடம் மட்டுமே கேள். அவர்களிடமிருந்து வருகின்ற விடையானது, சேற்று நிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கின்றவனுக்கு ஊன்றுகோல் துணை செய்வதுபோல, உன் வாழ்க்கைப்ப் பாதையில் வழுக்காது நடக்க உயர்ந்ததோர் ஊன்று கோலாக நின்று உதவும்.

எப்பொழுதும் நல்லவைகளைக் கேள்; அல்லது எவ்வளவாவது நல்லவைகளைக் கேள். அவ்வளவு உனக்குச் சிறப்பும், உயர்வும் உண்டு. "எனைத்தானும் நல்லவை கேட்க" என்ற குறளை எப்போதும் சொல்லிக் கொண்டிரு.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் தமிழினம்!