பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 - ஆறு செல்வங்கள்

அன்பும் அருளும் ஒன்றே. இவை இரண்டும் இரக்கமற்ற உள் ள த் தி ல் தோன்றுவதில்லை. இவை கருணை என்ற ஒரே பொருளைக் குறிப்பன என்பர் வேறு சிலர்.

மேற்கண்ட இரு கூற்றுக்களிலும் உண்மை இல் லாமல் இல்லை. அன்பும் அருளும் உண்மையில் வேறாக இருந்தும், அவை ஒன்று போலவே காட்சியளிக் கின்றன.

அன்பு என்பதும் அருள் என்பதும் மக்கள் உள்ளத்தே இளகி விளையும் ஒன்றேயாம். எனினும் அவை இடவேறு பாட்டாலும் நிலை வேறுபாட்டாலும் தகுதி வேறுபாட்டா லும் பெயர் வேறுபடுகின்றன. விளக்கம் கூறவேண்டு மானால், தொடர்புடையாரிடத்துத் தோன்றுவது அன்பு எனவும், பிரிடத்துத் தேரின்றுவது அருள் எனவும், சிறியோரிடத்து விளைவது அன்பெனவும், பெரியோரிடத்து விளைவது அருள் எனவும், இல்லறத்தில் காணப்படுவது அன்பெனவும், துறவறத்தில் காணப்படுவது அருள் எனவும் கூறலாம். இதனையே அன்பு நெறி என்றும் அருள்நெறி என்றும் கூறுவர். திருக்குறளில் அன்பு 24 இடங்களிலும், அருள் 18 இடங்களிலும் காணப் படுகின்றன. அன்பு பற்றுதலையும். அருள் இரக்கத்தையும் குறிக்கும். அன்பை மனிதத் தன்மையின் மீதும், அருளைத் தெய்வத் தன்மையின் மீதும் ஏற்றிக் கூறுவதுண்டு.

இறைவனிடத்திலிருந்து மக்கள் வேண்டுவது அன்பு அல்ல; அருளையே. அது பேரருளாகவும் பெருங்கருணை யாகவும் காட்சியளிக்கும். இதனை "அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை என்ற வள்ளலாரின் வாக்கு மெய்ப்பிக்கும். அவர் கண்டுகொண்ட தெய்வம் “பேரருள் ஒளி', 'பெருங்கருணை வடிவு” என்பது இதன் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/22&oldid=956409" இலிருந்து மீள்விக்கப்பட்டது