பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 33

ரூபாய்க்குத் தங்கம் இருக்க, 300 கோடி ரூபாய்க்குக் காகிதப் பணம் இருந்து வந்தது. இன்று அதே தங்கத் திற்கு 2100 கோடி காகிதப் பணம் இருந்து வருகிறது. காகிதப் பணம் 1க்கு 8 ஆகப் பெருகிவிட்டதால் ஒரு காசுப் பொருளுக்கு 7 காசும், 1 அனாவுக்கு 7 அனாவும், 1 ரூபாய்க்கு 7 குபாய் காகிதமும் கொடுக்கவேண்டியிருக் கிறது.

ஒரு நாட்டின் காகிதப் பணம் வெளிநாட்டில் செல்லாது. பிறநாடுகளிலிருந்து சாமான்களை வாங்கினால் தங்கமாகவே கொடுக்க வேண்டும். தங்கம் குறைவாக உள்ள நாடுகள் தம் நாட்டில் விளைந்த அல்லது செய்த பொருள்களைக் கொடுத்து வரும் இது ஏறத்தாழப் பண்டமாற்று முறை போன்றதேயாகும். இறக்குமதியைக் கட்டுப்படுத்தி ஏற்று மதியை விரிவுபடுத்தும் நாடுதான் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் என்றாலும் அது உள்நாட்டுத் தேவை யையும் நிரப்பி ஆகவேண்டும்.

பொருளாதார அறிவு மேலைநாடுகளிலிருந்து வந்த ஒன்று. அதற்குமுன் நமது நாட்டில் பொருட் செல்வத்தின் மீது பற்றற்ற தன்மையும், அது அவனவன் தலைவிதிப்படி வந்து சேரும் என்ற கொள்கையுமே இருந்துவந்தது ஒரு தனி மனிதனோ, ஒரு நாடோ தனது அறிவு ஆற்றல், ஊக்கம் உழைப்பு ஆகியவைகளால் வேண்டிய அளவு பொருட் செல்வத்தைப் பெறமுடியும் என்பதே பொருளாதாரக் கலையின் முடிவாகும்

செல்வங்களில் உயர்ந்தது பொருட் செல்வம். பணம் பத்தும் செய்யும் பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ளான் படைக்கு அஞ்சான், பணம் உடையவர் பலவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/35&oldid=956441" இலிருந்து மீள்விக்கப்பட்டது