பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4; ஆற்றங்கரையினிலே

பாடல் பெற்ற தலங்களுக்குத் தமிழ் நாட்டிலே தனிப் பெருமை உண்டு தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களும், ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகளும் சாலச் சிறப்புற்று விளங்குகின்றன. இதை அறிந்த வீரமா முனிவர் திருக்காவலூரை ஒரு பாமாலையில் அமைத்துப் போற்றினார்.

திருக்காவலூர்க் கலம்பகம் என்னும் பெயரால் வீரமா முனிவர் புனைந்த பாமாலை தெய்வமணக்கும் தமிழ் மாலையாகத் திகழ்கின்றது. அருங்கருணை வாய்ந்த அடைக்கலமாதா அடியாரது பாவத்தீயை ஆற்றுவாள்; பிறவிப் பிணியை மாற்றுவாள் என்று முனிவர் அழகுறப் பாடியுள்ளார்.

திருப்பதி என்னும் திருவேங்கடம் குலசேகர ஆழ்வாரது உள்ளத்தைக் கவர்ந்த வண்ணமே திருக் காவலூர் வீரமாமுனிவரின் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடமலையில் படியாய்க் கிடக்கவும், சுனையில் மீனாய்ப் பிறக்கவும், சோலையில் மரமாய் நிற்கவும் ஆசைப்படுகின்றார் குலசேகர ஆழ்வார். இத்தகைய ஆசை வீரமாமுனிவர் பாடிய கலம்பகத்திலும் வெளிப்படுகின்றது.

“ தாள்அணிந்த மதிமுதலாத் தமியனும்அக் கமலத்தாள் தாங்கி லேனோ

கோள்அணிந்த குழலணிதார் குடைவண்டாப்

புகழ்பாடி மதுஉண் னேனோ

வாள்அணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம்

ஈன்றஒரு மானாய் வந்தாள்

கேள்அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்

பசும்புல்லாக் கிடவேன் நானோ”

‘அடைக்கல மாதாவின் மலர் மாலையிலே ஒரு வண்டாக ஊர்ந்து, கருணைத் தேன் பருகும் பேறு