பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் $48

தன் மனையாள் மானுடமல்லள் மாதருக்குள் ஒரு தெய்வம் ‘ என்று மாசற உணர்ந்தான்; அயலறியாமல் மனையாளைவிட்டுப் பிரியத் துணிந்தான். மனத்திலே அக் கருத்தை மறைத்து வைத்து, வெளி நாட்டில் வாணிகம் செய்வான்போல் கப்பலேறிச் சென்றான்.”

திரைகடல் ஒடிய பரமதத்தன் திரும்பி வருவான் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து கவலை உற்றார் காரைக்கால் அம்மையார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனைப் பற்றிய செய்தியொன்று கிடைத்தது. பாண்டி நாட்டில் உள்ள ஒரு கடற்கரை நகரத்தில் அவன் வாணிகம் செய்து வாழ்வதாக அறிந்தார். உடனே சுற்றத்தார் சிலரைத் துணைக் கொண்டு புறப்பட்டார்; கணவன் இருந்த இடம் போந்தார். -

பரமதத்தன் மனம் பதைத்தான். புதிதாக மணந்த மனைவியோடும், பெற்ற மகவோடும் அவரடிகளில் விழுந்து வணங்கினான். அச்செய்கையைக் கண்டோர் எல்லாம் திகைத்து நின்றனர். பரமதத்தன் அவர்களைப் பார்த்து, இவர் மானுடம் அல்லர் பெண்ணாகி வந்த பெருந் தெய்வம். அதனை அறிந்தவுடன் இவரை விட்டகன்றேன். இங்கு மறுமணம் செய்தேன். பெற்ற இப் பெண் மகவிற்கு இவர் பெயரை இட்டேன். என் குலதெய்வம் இவரே யாதலால் குடும்பத்துடன் வந்து வணங்கினேன். இக் கண்கண்ட தெய்வத்தை நீங்களும் கைகூப்பித் தொழுங்கள்’ என்றான்.”

கணவன் சொல்லிய சொற்களைக் கேட்டாள் காரைக்கால் அம்மையார். அவன் உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உணர்ந்தார். இறைவன் திருவடியை நினைந்து உருகினார். ஈசனே இத்தனை காலமும் என்னைக்