பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#81 ஆற்றங்கரையினிலே

நிலையில் மத்தகத்தில் இருந்த மலர் ஈசன் சேவடியிற் சேர்ந்தது. இவ்வாறு யானைகளும் மலர் தூவி வழிபட்ட காட்சியைக் கண்டு இன்புற்ற திருஞான சம்பந்தர்,

“பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலிய ஏந்தி கூந்தற் பிடியும் களிறும்

உடன்வணங்கும் குறும்பலாவே” என்று பாடியருளினார்:

குற்றால மலையில் பல வகையான பழங்கள் உண்டு. குலை வாழைத் தீங்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் என்று தேவாரத்திலே பாடப்பட்ட செழுஞ் சோலைகள் இன்றும் குற்றாலத்தில் உண்டு. அம்மலையின் ஆதிவாசி களாய வானரங்கள் அப்பழங்களை வயிறாரத் தின்று வாட்டமின்றி வாழும்.

குற்றாலத்துக் குரங்குகள் தமிழ்ப் பாட்டில் அமையும் பேறு பெற்றுள்ளன. பூஞ்சோலையின் கிளைகளில் இருந்தும், நடந்தும், ஆடியும், ஒடியும் விளையாடுகின்ற குரங்குகளை நோக்கி, ‘ குற்றாலத்துக் குரங்கே கொப்பை விட்டு இறங்கே ! என்று பரிந்து பாடுவர் இளம் பிள்ளைகள். பிள்ளைக் கவிஞராகிய திருஞான சம்பந்தரும் இக்குரங்குகளின் மூதாதைகளைக் குற்றாலத்திலே கண்டார்.

“ மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி குலையார் வாழைத் தீங்கனி

மாந்தும் குற்றாலம்” என்று அவர் அருளிய பாட்டு ஒரு செஞ்சொல் ஒவியம்; குரங்கு ஒன்று குட்டியோடு மலையினின்று இறங்கிற்று; வாழைத் தோட்டத்தின் உள்ளே புகுந்தது. செம்மையாகப் பழுத்திருந்த வாழைக் குலையின் மீது அமர்ந்தது;