பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி மாநகரம் 20

தோற்றான்; பல்லவன் வென்றான். ஒற்றர் வாயிலாக வெற்றிச் செய்தி கேட்ட கச்சி மாநகரத்தார் பெருங் களிப்புற்றனர். அச்சம் தீர்த்தருளிய கச்சி ஏகம்பனை அகனமர்ந்து ஏத்தினர்; பல்லவ நந்திக்குப் பல்லாண்டு பாடினர்.”

தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்றவுடன் பல்லவன் தலைநகருக்குத் திரும்பி விடவில்லை; தோற்று ஒடிய பகைவர் சேனையைத் தொடர்ந்து முடுக்கினான்; ஒன்னார் படைத் திறத்தை ஒடுக்கினான்; வைகையாறு வரையும் அவரைத் துரத்தினான்.

காஞ்சி மாநகரில் மன்னன் இல்லாத மாளிகை பொலி விழந்து இருந்தது. நந்தியின் மனையாள் கணவன் சென்ற வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். இளவேனில் வந்தது. மாஞ்சோல்ை தளிர்த்தது. பூங்குயில் கூவிற்று.

அந்நிலையில் கோயில் மணி அடித்தது; வெற்றி முழக்கம் வானில் வெடித்தது; கொற்றவன் வந்தான் என்று கட்டியம் எழுந்தது. கரை கடந்த வெள்ளம்போல் காஞ்சி நகர மாந்தர் திரண்டு போந்து மன்னன் திருமுகத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

“மல்லை வேந்தன் மயிலை காவலன் பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி” வாழ்க பல்லாண்டு என்று பூவேந்தனை வாழ்த்தினர் பாவேந்தர். இவ்வாறு பல்லோரும் பணிந்து போற்ற, எல்லாம் வல்ல இறைவன் திருவருளை மனமார வாழ்த்தி மாளிகையிற் சென்று சேர்ந்தான் பல்லவர் கோமான்.

நாட்டிலே போர் ஒடுங்கிற்று நந்தியின் புகழ் ஓங்கிற்று. போர்க்களத்தில் வாகைமாலை சூடிய வேந்தன் கற்றோர் அவைக் களத்தில் தமிழ் மாலை பெற்று மகிழ்ந்தான். வில்லேருழவனாய் விளங்கிய வீரன் சொல்லேருழவனாய்