பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆற்றங்கரையினிலே

வீற்றிருந்தான். வேலேந்திய கையில் தமிழ் ஏடேந்திய நந்தி மன்னனை வியந்து பாடினர் பெருங் கவிஞர்.

நந்தி மன்னனின் கொடைத் திறத்தையும், படைத்திறத் தையும் செந்தமிழ்ப் புலவர்கள் பாராட்டக் கண்டு அழுக்காறு கொண்டனர் அவன் தம்பியர். தமிழே உயிர் எனக் கருதி வாழ்ந்த தலைவனைத் தமிழாலே கொல்வதற்கு வழி தேடினர். அன்னார் தீய கருத்திற்கு இசைந்தான் ஒரு கவிஞன், நந்திக் கலம்பகம் என்னும் பெயரால் ஒரு பாமாலை புனைந்தான் நல்ல சொற்களின் இடையே நச்சுப் பதங்களை அமைத்தான். நஞ்சு தோய்ந்த அமுதம் போன்ற அக் கலம்பகம் நந்தியின் நெஞ்சைக் கவர்ந்தது. தொடக்கத்தில் அமைந்த

“ பருப்புரசை மதயானைப்

பல்லவர்கோன் நந்திக்குத் திருப்பெருக அருளுகநின்

செழுமலர்ச்சே வடிதொழவே”

என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுளில் உள்ள திருப்பெருக ! என்பது செல்வம் ஒழிக என்னும், பொருள்பட நிற்கின்றது. இன்னும் பல்லவ நந்தியைப் பார்த்துப் பாடும் பான்மையில் அமைத்த பாட்டிலும் அமங்கலச் சொல் விழுந்திருக்கின்றது.

“ புலஅரசைப் புறங்கொண்ட

புகழ்சேர் கோவே !

பூவலயம் தனில்கரிவாய்

நின்ற மன்னா !

சொலஅரிய திருநாமம்

உனக்கே அல்லால்

சொல்லொருவர்க் கிசையுமோ

தொண்டைக் கோவே ”