பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி மாநகரம் 22

என்ற பாட்டிலே கரியாய் நின்ற மன்னா ’ என்ற அமங்கலத் தொடர் காணப்படுகின்றது.

இத்தகைய கலம்பகத்தைக் கேட்டு இன்புற்றான் மன்னன். தமிழ்ச் சுவையுடைய பாட்டுக்கு உயிரைக் கொடுத்தலும் தகும் என்று கருதினான் அக் காவலன். பாட்டு முடிந்தது; பல்லவன் மாண்டான். கற்றோர் உள்ளம் மடிந்தது: காஞ்சியார் மனம் இடிந்தது. கலம்பகத்தால் உயிர் துறந்த நந்தியின் பெருமை நாடெங்கும் பரவிற்று.

“நந்தி கலம்பகத்தால்

மாண்டகதை நாடறியும் ”

என்று பாடினார் மாதவச் சிவஞான முனிவர்.