பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 . ஆற்றங்கரையினிலே

171 : 4. ‘ பனிதி லாக்கதிர் பரப்பிய

முத்தவெண் மணலால் பனிவ ரைக்கொடி திருவுரு

பாற்பட வகுத்து பனிம லர்த்தொடை சூடியும்

பரவியும் நோற்றுப் பணிஇ றப்பினில் படர்புனல் ஆடுவான் படர்ந்தார்.” (பனி வரைக்கொடி - பார்வதி தேவி, தொடை - மாலை.)

- பாகவதம். 17 : 5. “ மாதர்கொள் மாதர் எல்லாம்

மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை நாள்முன் ஈரைந்து

ஆகிய தினங்கள் தம்மில் மேதகு மனைகள் தோறும்

அழைத்திருள் விடிவ தான போதிவர் தம்மிற் கூடிப்

புனற்றடம் ஆடல் செய்வார்.” (மாதர் - அழகு திங்கள் - மாதம், ஈரைந்து - பத்து தடம் - பொய்கை)

- பாகவதம்.

172 : 5. “ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்

தீர்த்தன்தற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்.இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி’ (ஆர்த்த கட்டிய, தீயாடும் - அனல் ஏந்தி ஆடும், குவலயம் - உலகம், கரந்தும் - ஒடுக்கியும்) - திருவாசகம், 172 : 7. “ ஊர்திரை வேலை -

உலாவும் உயர்மலைக் கூர்தருவேல் வல்லார்

கொற்றங்கொன் சேரிதனில்