பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

9

5

ஆற்றங்கரையினிலே

31. திருநெல்வேலி

176 : 1. “ திங்கள்ஒன் றாகச் சிறையிருந் தோம்.இச்

சிறையகற்றி

எங்கள்தம் பால்இரங் காததென்னோ? இசை

நான்மறையின்

சங்கமும் கீதத் தமிழ்ப்பாட லும்சத்த

சாகரம்போல்

பொங்குதென் போரைப் புனிதா கருணைப்

புராதனனே “

- குழைக்காதர் திருப்பணி மாலை.

188 : 2. “வாரா திருந்தால் இனிநானுன்

வடிவேல் விழிக்கு மையெழுதேன் மதிவாள் துதற்குத் திலகமிடேன்

மணியால் இழைத்த பணிபுனையேன் பேரா தரத்தி னொடுபழக்கம்

பேசேன் சிறிதும் முகம்பாரேன் பிறங்கு சுவைப்பால் இனிதுாட்டேன்

பிரிய முடன்ஒக் கலையில்வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன்;

செய்ய கணிவாய் முத்தமிடேன் திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்

திருக்கண் வளரச் சீராட்டேன் தாரார் இமவான் தடமார்பில்

தவழுங் குழந்தாய் வருகவே ! சாலிப் பதிவாழ் காந்திமதித்

தாயே வருக ! வருகவே !”

- காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ். 32. திருக்குற்றாலம்

180 : 1. “ செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்

கொல்லை முல்லை மெல்லரும் பீனுங் குற்றாலம் வில்லி ைொல்க மும்மதி லெய்து வினைபோக நல்கு தம்பா னன்னகர் போலுந் நமரங்காள் ! “

- திருஞானசம்பந்தர் தேவாரம்,