பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேங்கடம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் நாட்டின் எல்லைகளை வகுத்தாள் இயற்கை அன்னை; பெருங்கடலும் நெடுமலையும் அரண்செய்து நின்ற தென்னாடே தமிழகம் என்று வரையறுத்தாள். வடக்கே வேங்கடம், தெற்கே குமரி, கிழக்கே குண கடல், மேற்கே குட கடல். இந் நான்கு எல்லையுள் அமைந்த பண்டைத் தமிழ் நாட்டை, -

“வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்த் தொல்காப்பியப் பாயிரம் பாடிற்று. இத்தகைய திருநாட்டில் தமிழ் வேந்தர் கொடி பறந்தது; அவர் ஆட்சி சிறந்தது. முத்தமிழும் செழித்து வளர்ந்தது.

கன்னித் தமிழின் சுவையறிந்த கருங் கடல் தென் புலத்தின் ஒரு பகுதியைக் கொள்ளை கொண்டது. இவ்வாறு கேடு விளைத்த கடலின் கொடுமை கண்டு குமுறினார் இளங்கோவடிகள். ஆயினும், தமிழகத்தின் வடக்கெல்லையேனும் வடுப்படாதிருக்கின்றதே என்று எண்ணி ஒருவாறு மனம் தேறினார்.

“நெடியோன் குன்றமும்

தொடியோள் பெளவமும் தமிழ்வரம் பறுத்த

தண்புனல் நாடு ‘