பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடம் 38

உள்ளம்; வீட்டரசு நல்கும் வேங்கடநாதன் திருவடியை நாடிற்று அவர் நெஞ்சம். “ சீரும் வேண்டேன்; செல்வமும் வேண்டேன்; ஊரும் வேண்டேன், பேரும் வேண்டேன்.”

“ தேனார் பூஞ்சோலைத்

திருவேங் கடச்சுனையில் மீனாய்ப் பிறக்கும்

விதியுடையேன் ஆவேனே “ என்று பாடிப் பாடி மனம் குழைந்தார். வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் திருமலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கவும், ஆறாக ஓடிப் பாயவும், படியாய்க் கிடந்து பரம்பொருளின் பவளவாய் காணவும் ஆசைப்படுகின்றார் அவ் வரசர்’ -

மூவுலகும் ஈரடியால் அளந்த நெடுமாலின் நின்ற திருக் கோலத்தைத் திருவேங்கட மலையிற் கண்டு வழிபட்டனர் ஆழ்வார்கள். அந்த முறையில் நெடியோனே ! வேங்கடவா !” என்று ஆதரித்து அழைத்தார் குலசேகரப் பெருமாள். “தாள் பரப்பி மண் தாவிய ஈசனை ‘த் திருவேங்கடத்தில் கண்டு கை தொழுவார் வினை அறுவார், வீடு பெறுவார் என்று திருவாய்மொழி பாடிற்று:

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் தம் உயர்ந்த குறிக்கோளைத் தமிழறிஞர்க்கு உணர்த்துகின்றார். “ சொன்னால் விரோதம்; ஆயினும் என் உள்ளத்தில் உள்ளதை உரைத்தே தீர்வேன். ஈசன் அருளால் இன்கவி பாடும் திறம் பெற்றேன். யான் பெற்ற கவிதை வளத்தைக் கசடருக்கு வழங்க மாட்டேன், நரனைப் பாடமாட்டேன்; என் நாதனையே பாடுவேன். அற்பனை அணிந்துரையேன். திருவேங்கடத்து அப்பனையே பணிந்துரைப்பேன்.”

“ சொன்னால் விரோதம்இது

ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ