பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும் பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர். தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர். தன்மானம் மிக்கவர். அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர். அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்ப தைக் காணலாம். 'காலமெல்ல்ாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான் அவனும் இவனும் எவனும் ஒன்றாய் ஆகும் கொள்கை யுடையவன் யான் விருப்பு வெறுப்பை வென்று வாழும் வேதாந்தி போல் ஞானி நான்’ என்று அவர் அறிவிக்கிறார். என்னைப் போல் முயற்சிக்கே இவ்வுலகில் எவன் பிறந்தான்! கையில் செப்புப் பொன் பொருள்கள் சிறிதுமிலா நிலையில் கூடப், புலம்பாமல் அஞ்சா நெஞ்சத்