பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த் அருங்கவிஞர் 3 9r உண்மைக்குப்புறம்பாகும் க்ாக்க்ாய் பிடிப்போரைக் கால் துாசாய் மதிக்கும் ஆண்மை அவரிடம் இருக்கிறது. மெய்யே நினைத்து விடிவே கருதி, வெல்லும் வகை. யில் உழைப்பேன்; மேன்மை எய்யும் உணர்வை இதய வலையில் இட்டே எஃகாய்ச் சமைப்பேன் என்றும், உண்மைப் பலமோ உலகைப் பணிய வைக்கும் பாதை. வகுத்துச் சிரிக்கும் என்றும் உறுதிக் குரலில் அறிவிக் கிறார் பெருங்கவிக்கோ. "பொறுமையே எனது வாழ்வுக்-கூதல் குளிர்குறை போர்வை ஆகும். தறுகண்மைத் திருப்தி ஒன்றே-வெற்றி தரும் பொருள் ஆண்மை நல்கும். வறுமை என் பெருமை ஆகும்-பற்றில் வர்ழ்க்கையென் நிறைவேயாகும் பெறும் பேறு நம்பிக்கையே-வலிமை பெய்மன உயிரின் மூச்சாம்!" உண்மையைத் துணை கொள்ளும் திறனையும் உள்ளத்தில் திருப்தி காணும் மனநிறைவையும் பேறு களாகப் பெற்றுள்ள பெருங்கவிக்கோ, இத்தகைய நற்பண்புகளை எல்லாம் எங்கிருந்து பெற முடிந்தது என்பதை ஒரு இடத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். "துன்பச் சுமையைத் துணிவோடென் கவித்துரணில் அன்பாய் இறக்கி வைப்பேன்; அவள் எனக்குச் - சுமைதாங்கி வெல்லும் கவிச்சுடரே விரிஉலகில் என் சொத்து!