பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 வல்விக்கண்ணன் அது எடுத்துக் காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார் கவிஞர் இருள் விலகி விடியல் தோன்றுவதை இவ்வாறே, உண்மைகளை விவரிக்கும் ஒரு சந்தர்ப்பத்திலும் சில இயற்கை அறிவுறுத்துகின்றது என்று பொருத்தமாகப் பாடியிருப்பது பாராட்டுதலுக்குரியது. - பரிதி கீழ் வான் வாரி இருந்து வண்ணக் குழம்பைச் சீரின் கலந்து தெளித்திடும் நேரம், கருக்கிருள் கலைந்தது! காலை எழுந்தது! வருத்தம் சோர்வை மனிதரே விடுத்துத் திருத்தம் காணத் தெளிவு பெறுக! பெருமை தேடப் பீடுடன் முயல்க! ஆற்றல் சிறகை அகல விரிக்க நோற்றல் தவத்தால் நுண்மை தேடுக! மாற்றம் சுருதி மதி இழக்காதீர்! கூற்றம் வருமுன் குடிப்புகழ் சமைக்க இரவு மயக்க எண்ணம் விடுக! கரவு நெஞ்சக் கயமை கெடுக! உறவால் வையகம் உவக்க எண்ணுக துறவு மனத்தால் தொண்டு பண்ணுக என்றறை கூவல் நன்று விடுத்தல் போல் தண்சிற கார்க்கும் பன்மணிப் புள்ளினம் அறிவிக்கின்ற ஆர்புள் ளொலிகள் வெறி விலக்கல் போல இருளும் விலக்கும்’ என்று இனிமையாகப் பாடியுள்ளார், இயற்கையில் அழகு சிரிக்கின்ற தன்மைகள் குறித்து பெருங்கவிக்கோ ஒரு நீண்ட கவிதையில் விரிவாகவே பாடு