பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 1? "இன்றுவரைப் பழங்கதைகள் இனிப்பாகப் பேசலன்றி ஒன்றுபடச் செய்ததென்ன? உலகுக் குரைத்ததென்ன? நின்றுநீர் சிந்தித்தால் நெடுமூச்சு விடுவதன்றி நன்று நாம் நமைக்காட்ட நானிலத்தில் செய்ததென்ன? இன்றமிழ் நாட்டோரே எண்ணுக எண்ணுகநீர்!’ நாட்டின் சீர்கெட்ட நிலையைக் கண்ட மகாக பாரதியார், 'நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால் என்று வேதனைக் கண்ணிர் உகுத்தார். நாட்டு மக்களின் கேடுகெட்ட நிலை கண்ட பெருங் கவிக்கோ உளம் கொதித்துச் சீறுகிறார் : 'நப்பாசையால் தமிழன் நலிந்து கெட்டான்! நம்மொழியை நம்மினத்தை அழிக்க விட்டான்' தப்பாக நடப்போரை மற்றார் தம்மைத் தாள்பற்றி நடக்கின்றான்! தியாகம் செய்த ஒப்பில்லாத் தமிழர்களை ஏசுகின்றான்! உயிரில்லாப் படைத்தமிழா போடா போ போ! நம்மவர்க்கும் உணர்வில்லை! உரிமை கேட்கும் நல்லுறுதி நெஞ்சில்லை அழும் பிள்ளைக்கு