பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் இ 39 என்றென்றைக்கும்! ஒழித்திட வேண்டும் தீக்கையூட்டுகள் தருவார் தம்மை என்றும், பேசிப் பேசிக் காலமெல்லாம் பெருமை - இழந்தோம் பேருழைப்பைத் தோழர்களே ஏற்றிப் போற்றுவோம்!" என்றும் கவிதை முழக்கம் செய்கிறார் அவர். "சுடர்முகம் காக்க வேண்டும் சோர்வின்றி உழைக்க வேண்டும் அடலேற்று வலிமை வேண்டும் அஞ்சிடா வாழ்வு வேண்டும் கடலைப்போல் உள்ளம் வேண்டும் கறைபடாக் கரங்கள் வேண்டும் நடமாடும் தொழிற்கூடம் வேண்டும் நல்லுழைப்பாளர் வேண்டும் நாடு மூன்னேறுவதற்கு இந்திய நாடு முழுவதும். ஒன்றே என்ற ஒருமைப்பாட்டு உணர்வு நாட்டு மக்களி டையே வேரூன்றி வளர வேண்டும். ஏற்றமும் தாழ்வும் ஒன்றே, எந்தையர் நாடிங்கேதான் எல்லாரின் வாழ்வும் ஒன்றே என்ற வண்ணம் பரவ வேண்டும். இந்த அடிப்படையில் மகாகவி பாரதியார் கவிதையில் கனவுகள் வளர்த்தார், அதே தன்மையில் தற்காலத்துக்கு. ஏற்றபடி தன் கவிக்கனவுகளை வளர்த்திருக்கிறார் பெருங். கவிக்கோ. நடைமுறை சாத்தியமான கனவுகள் தான்.

  • வங்கத்தில் விளைபொருள்கள்

மையத்து நாட்டில் சேர்ப்போம்! பொங்கிடும் இயற்கை தாயாள் பொலிவுடைக் கேரளத்தாய்