பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வல்லிக்கண்ணன் ஐயப்பனைப் போற்றித் துதிக்கும் பாடல்களிலும் கவிஞரின் முற்போக்குச் சிந்தனை சுடர் தெறிப்பதை உணரமுடியும். 'மதமென்ன, குலமென்ன, மார்க்கங்கள்தான் என்ன? மனமொன்றிச் சேர்வதில் மனிதர்கள் ஓரினம்! இதையறிந்தோ யெனில் எல்லோரும் ஒர்மதம்! என்பதைக் காட்டினாய்! மன்பதை ஊட்டினாய்!” என்றும், "பலப்பல மதங்கள் ஏன்? பாரினில் சண்டை ஏன்? பயன்பெற ஒரிறை பார்ப்பதில் பேதம் ஏன்? என்றும் அவர் உள்ளம் கேட்கிறது. ஐயப்பனிடம் வேண்டுதல் செய்வதிலும் கவிஞரின் பேருள்ளம், அன்புள்ளம், மனித நேய உள்ளம் பளிச்சிடு வதைப் பாடல்மூலம் அறியலாம். 'அருளாயோ உடைமைப் பெருஞ்செல்வம், ஒழுக்க நெறி வாழ்வு! கடமைதனைப் போற்றும் கல்வி ஊக்கத்தால் திடம் கொள் சிந்தை, திறத்தோடு கோடிப்பொருள்! தேடிப் பிறர்க்களிக்கும் தெளிவு, உலகத்தை ஈடில் பெருவாழ்வில் இணைக்கும் அறிவோடு கூடும் நலமெல்லாம் கூட்டுவிப்பாய் ஐயப்பா! என்று கோரிக்கை விடுக்கிறார் கவிஞர்.