பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


லப்போற கதை ஒனக்குப் புதிசாயிருக்கும். என்னோட முதல் சம்சாரத்துக்காக வாங்கியாந்த தீவாளித் துணி மணிகதான் பானைக்குள்ளே இருந்துச்சுது!... ஒனக்கு நானும் எனக்கு நீயும் ஆதரவுன்னு ஆனப்பறம் பழசைக் கிளற எனக்கு இஷ்டமில்லே. ஆனா, இந்த மூணு நாலு வருசமாய் அல்லும் பகலும் எனக்கு ஒரேயொரு நினைப்பா இருக்கிறவ என்னோட முதல் பொஞ்சாதி அங்காளம்மையேதான்!... அவ தெய்வம் எப்பிடி, இந்த வெறும் மனுசன்கிட்டே வாழுவா?... அந்தப் புதுத்துணிகளிலே தான் நான் நித்தம் எனக்குச் சொந்தமான அங்காளம்மையைக் கண்டுக்கிட்டிருந்தேன். இப்ப அந்தக் கடைசி ஆறு தலைக்கூட பறிச்சிக்கிட்டியே, பாவி?"

நெற்றிப் பொட்டில் ரத்தக் கோடுகள் கிழிக்கப்பட்டன!

"மச்சான்!..."

பொன்னரசி அலறியழுதாள்.

காயாம்பூவின் காலடியில் கிடந்த அவளுடைய தலையைக் காலால் எட்டித்தள்ளினான். அவன் கதவை உதைத்து வெளியேறினான்.

"மச்சான், இப்பப் பாருங்க. உங்க பொஞ்சாதியின் புடவையும் ரவிக்கையும் இந்தாலே, இருக்குது; எடுத்துக்கிடுங்க!"

காயாம்பூ கண்களை மூடி மூடித்திறந்தான் "மச்சான், ரெண்டு மாசமா எங்கண்ணை உறுத்திக்கிணு இருந்த இந்தப் புடவை, ரவிக்கையோட கதை புரியாமத்தான் நான் முழிச்சுக்கிட்டிருந்தேன். அதைத் தெரிஞ்சுக்கிடத் தான் பொய்யும் சொன்னேன். என்னோட அக்காவுக்குச் சொந்தமானதை நான் தில்லுமல்லு செய்ய ஏலுமாங்க மச்சான்... இப்ப ஒங்களுக்கு எடுத்தாந்திருக்கிறது