பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

றார்கள்...! இன்பமயமான இல்லற வாழ்வுதான்! ஆனந்த மயமான சொப்பன உலகம்தான்!

ஆ... அந்தப் பயங்கரப் பின்னணி!...அந்த மரண விளேயாட்டு...! அந்தப் புகழ் வெறி...!

“மரணக்கிணறு...!”

“...ஐயோ, கிடுகிடு பாதாளமாகச் செல்கிறதே அந்தக் கிணறு...! அதோ, அவன்தான் சுதாகர்!...இன்னொருவன் தான் பம்பாய் சாம்பியன் மிஸ்டர் ரமேஷ், அதோ, மோட்டார் சைகிளும் கையுமாக மரண விளையாட்டுப் பந்தயத்தில் இறங்கி விட்டார்களே...ஆஹா, அந்த இரு வீரர்களுக்கும்தான் எப்படிச் சிரிப்புப் பொங்கி விளையாடுகிறது. மரண விளையாட்டில் உயிரைப் பணயம் வைத்து விளையாடத் துணிந்ததற்கென்று புறப்பட்ட தன்னம்பிக்கைச் சிரிப்பா அது?...அல்லது விதியின் விளையாட்டைக்கூட வென்று விட்ட சிரிப்பா?...ஜனங்கள் எப்படிக் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். மோட்டார் சைகிள்களின் சிம்ம கர்ஜனை வேறு காதைச் செவிடுபடச் செய்கின்றனவே...அதோ பாதாளக் கிணற்றிலே-வட்ட வட்டமாகத் தலை கிறுக்கும்படியாக அவ்வளவு துணிச்சலுடன் சுழன்றாேடுகிறார்கள்.கண்மூடிக் கண் திறப்பதற்குள்ளே எத்தனை இந்திர ஜாலங்கள்!.ஆ..! அவர்கள் இருவர் கண்களிலும் ஏன் இத்தனை வெறி?...புகழ் வெறியா அது? சுதாகர் வீறுபெற்றுச் சுழன்றான் ரமேஷம் அப்படியே தான் சுற்றுகிறான். ஆ..!அதோ கிணற்றின் மத்தியிலுள்ள அந்தச் சிறுகொடியை அவிழ்த்துவிட்டால் அதுவே அவர்கட்கு வெற்றிக் கொடி யார் முதலில் வெற்றிக் கொடி பிடிக்கப் போகின்றார்கள்?...என்ன ரமேஷ்தானா?ஆனால் சுதாகர்...அந்தோ!...அதன் தலை அப்படிச் சுழல்கிறது? மோட்டார் சைகிளினின்றும் நழுவி ... ஐயையோ..!”