125
“ஐயோ, அத்தான்!” என்று கூவி அலறினாள் வாசவி. ஆறாகப் பெருகிய கண்களுடன் விழித்துப் பார்த்தாள். எத்தனை பயங்கரமான எண்ணங்கள்! நல்ல வேளை. பிழைத்தாள்! எம்பி இறங்கிய கெஞ்சம் பெரு மூச்சில் படபடப்பை அடக்கிக் காட்டிற்று. கூடத்திலிருந்த நிலைக்கண்ணாடியில் அவள் பார்வை பதிந்தது. பாதாதிகேசம்வரை பூகம்பமாயிற்று. ரோஜாக் கன்னங்களிலே முள் கீறினாற்போல ரத்தக்கரைப் படிந்த வரிக் கோடுகள் சிரித்தன.
மாலையில் நடந்த சம்பவம் அவள் நினைவில் 'ஆஜர்’ தந்தது.
அன்றுதான் மரணக்கிணற்றுப் பந்தயம். சுதாகர் ஒரே புகழ்க் கனவு லயத்தில் மிதந்தவாறு, ஆடம்பரமாக உடை உடுத்துக்கொண்டுப் புறப்பட்டுப் போனான்.
"வாசவி..."
"அத்தான்..."
"கண்ணே, இன்று எனக்கு ஒரு சோதனை நாள்; ஆனால் இதுவேதான் எனக்குரிய பொன்னாளுங்கூட. புகழ் என்னை அண்டி அணையும் நாளல்லவா?...விடை கொடு. நான் போய் வரட்டுமா?...பாபுவைக் கெட்டியமாய்ப் பார்த்துக் கொள்...பார்த்தாயா, மறந்துவிட்டாயே?...உன் தங்கக் கையால் தாம்பூலம் மடித்துக் கொடு!..." என்றான் சுதாகர். அவன் கைகள், மனைவியின் நெற்றியைத் தடவிக்கொடுத்தன.
வாசவியின் கண்களில் கண்ணீர் இருந்தது.
"அத்தான்...அத்தான்-இந்தப்போட்டியில் நீங்கள் அவசியம் கலந்துகொள்ளத்தான் வேண்டுமா?...எனத் பயமாயிருக்கிறதே அத்தான்..." என்று கெஞ்சினான்.