பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


மறக்குமாறு வேண்டுதல் விடுத்ததையும் அதன் பலகை உங்களுக்குள் ஏற்பட்ட பூசலையும் அறிய நேர்ந்தது, உங்கள் கணவரின் புகழ் வெறிக்கு-புகழ் வெற்றிக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன், நிற்கவே மாட்டேன்! அதிசயமாகயிருக்கிறதா?...உங்கள் துணைவருக்கு ஒரே புகழ் ஆசை. ஆனால் உங்கள் இதயத்தின் பயத்தைஉங்கள் கணவரின் புகழ் வெறிக்கடியில் நிழலாடும் மரண விளையாட்டை நீங்கள் அறிவீர்கள்; நான் அறிகிறேன். உங்கள் பதி அறியவேண்டாமா?...உங்கள் தாலிப் பாக்கியம் அவருக்கேதான் முதல் வெற்றியருளப் போகிறது...! நான் போட்டியில் கலந்துகொள்வேன்; ஆனால் வெற்றி உங்கள் கணவருக்கேதான்...! அதிசயமாமாகயிருக்கிறதா...! இனியாவது உங்கள் தாம்பத்தியத்திலே தென்றல் வீசட்டும்! அதுவே எனக்கு அமைதி சொல்லும்...!

இப்படிக்கு,
ரமேஷ்.

உலகத்தின் எட்டாவது அதிசயமா இது?

வாசவி கண்களைத் திறந்து பார்த்தாள்.

சுதாகர் நின்றுகொண்டிருந்தான், ஆனந்த வெள்ளத்திலே மிதந்துகொண்டு.

"அவர் முதல் வெற்றி பெற்றுவிட்டாரா?...ஆஹா! இனியாவது அவருடைய புகழ் வெறி அடங்குமல்லவா? என் தாலிப்பாக்கியமே பாக்கியம்...! பரிசு ஆயிரம்ரூபாய்.. ஆமாம், ரமேஷ் தியாகி ரமேஷ் எழுதிய லெட்டரை அத்தான் கண்ணில் காட்டவே கூடாது.அத்தான், இனிக் கட்டாயம் இந்த மரண விளையாட்டில், சிந்தை செலுத்த மாட்டாரல்லவா?...எனக்கும் என் கண்மணி பாபுவுக்கும்