பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

முகப்பு மண்டபத்தையும் கோட்டம் விட்ட அந்த உருவம் சுவரில் பதித்திருந்த பொத்தானை அழுத்தி விட்டது.

தாழ்ப்பாள்களைத் திறந்து கொண்டு, 'யாரது?’ என்ற அதிகாரக் குரல் கேட்டது. கேட்டவன், அந்தப் பங்களாவின் சமையற்காரன். வெளித் தாழ்வாரத்தின் மின்சார விளக்கைப் பொருத்தினான்.

அந்த உருவத்தின் முழுச் சித்திரத்தை எடுத்துக் காட்டியது, மின்சார விளக்கின் ஒளி. வாரிக் கலைக்கப் பெற்ற கிராப்பு முடி; சலவை செய்து கசங்கிப் போன உடைகள்; வேளைகெட்ட வேளையின் தூக்கக் கலக்கம் கொண்ட முக விலாசம்.

"யோரு நீங்க?”

‘என் பெயர் கந்தப்பன். ஒரு அவசரக் காரியமாகச் செட்டியார் ஐயாவைப் பார்க்கவேண்டும்!” என்றான் இளைஞன்.

அவன் பேசி நிறுத்துவதற்கும் மாடியிலிருந்த செட்டியார் தட்டுத் தடுமாறிய வண்ணம் இறங்கி வருவதற்கும் கணக்காக இருந்தது. செட்டியார் கண்களைத் துடைத்துவிட்டுக் கந்தப்பனை ஏறிட்டு நோக்கினார்.

கந்தப்பன் கைகூப்பி வணங்கினான்: கை கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. "எசமான்" என்றான் அவன்,

“திருட்டுப் பயலே... நீ ஏன் இங்கே வந்தாய்? திரும்பவும் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போகவா இப்படி நேரங்கெட்ட நேரத்திலே வந்திருக்கிறாய்; நம்பிக்கைத் துரோகி!என் கண்முன்னால் நிற்காதே. இங்கிருந்து ஓடிப் போய்விடு!...” என்று இரைந்தார்.

கந்தப்பனின் விழிகள் கண்ணீரைச் சிந்திக்கொண்டே