பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

விட்டால் அன்றையப் பணியும் கடனும் முடிந்த கதை தான்.

வேப்பமரப் போத்துக்கு அடியில் நார்க் கட்டிலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு குந்தி வெற்றிலை குட்டானைப் பிரித்து ஒரு ‘வாட்டி’க்கு வெற்றிலைச் சருகு போட்டுக் கொண்டதுந்தான் அண்ணாமலைக்கு நல்ல மூச்சு வரும். நிலவுக்கும் இருட்டுக்கும் ஊடே, இடதுகை விரல்களினூடே, எச்சிலைப் பிழிந்து பிழிந்து துப்புவார். அரை வட்டக் குடுமியை உதறி எடுத்துப் பிசிர்தட்டி மீண்டும் முடிந்துகொண்ட கையுடன், இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப் பையைத் துழாவி, அன்றைய வரும்படியை கணக்கிடுவார். ‘சபாசு! ரெண்டு ரூபாவுக்கு ஒருபணம் குறைச்சல்! பரவாயில்லே! செவ்வாச் சந்தையிலே ஒரு கட்டு வைக்கக் கூளம் வாங்கனும்; கச்சப்பொடி,கருவாடு வாங்கவேனும்; பொடிசுக்குப் பொட்டுக்கடலை ஒரு மூணு காசுக்கு வாங்கியாகனும்; வள்ளியம்மைக்குச் சோள முறுக்கு வேணும். சரி, எண்ணிப் பாத்தாக்க, சுருக்குப்பைப் புழுதிதான் மிஞ்சும்!’

“ஓங்களைத்தானுங்களே!...”

அண்ணாமலைக்குக் குரலை இனம் காணவா தெரியாது? தெரியும், தெரியும்!

அமுத்தலாக, கன்னத்தில் ஏந்திய கையுடன் உட்கார்ந்திருப்பார்.

மறுபடியும் குரல் குடையும், “ம். வள்ளியம்மை வூட்டுக்காரங்களே!” என்றபடி வந்து நிற்பர்ள் வள்ளியம்மை. அள்ளிச் செருகிய கொண்டை; அதில் ஓர் இணுக்கு மருக்கொழுந்து, நெற்றியில் குங்குமம், முகத்தில் கன்னியாக்குறிச்சி மஞ்சள் பூச்சு. கம்மல் சுழ்ன்றாட, புல்லாக்குப் பூரித்துச் சிரிக்க, கடைக்கண் விலக்கி, இதழ