பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

உறை கழன்றது. வாசித்தாள். ஒரே கணத்தில் ஆனந்தச் சிரிப்பு கும்மாளமிட்டது. “என் மகன் சம்மதம் அடுத்த மாசம் ஐந்தாம் தேதி கல்யாணம். பிற நேரில்” என்றது

“அம்மா! அம்மா!”— அகிலாண்டம் காலத்தின் நடந்த கதையைத் துண்டுபட நிறுத்திவிட்டு விரைந்தாள். படுக்கையில் உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தான் குமார்... “அப்பா ராத்திரி பேசினாங்களா அம்மா?” என்று ஆதுரத்துடன் கேட்டான். அவள் மறுமொழி புகலவில்லை. ‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தாள். பத்து நாட்களுக்கு முந்தி, ராமலிங்கம் எவ்வளவு ஆரோக்கியத்துடன் உலவினார்? முகத்தில் தெளிவும், கண்களில் களிப்பும், மேனியில் மினுமினுப்பும் கொண்டு விளங்கினாரே அவர்? மயிலாப்பூரிலே அவருக்குத் தொழில். பெரிய ஜவுளிக் கடை. ‘அகிலாண் படம் ஸில்க் எம்போரியம்’ என்றால், லஸ் முனையில் வெகு பிரமாதம். கடை மூடியானதும் சாவிக் கொத்துடன் வந்து காரை ‘போர்டிகோ’வில் நிறுத்தி விட்டு, “அகிலா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே மாடிப்படிகளைக் கடந்தவர், இருந்திருந்தாற் போல மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார். எஞ்சியிருந்த படிகளில் அவரது மேனி ரத்தத் துளிகளைப் பதித்தது. தொலைபேசி. இயங்கியது; மாறுபட்ட எண்கள் மாறி மாறித் திருப்பப்பட்டன. நாடிக் குழல்கள் சோதித்தன. வகை வகையான மருந்துகளும் புதுக் கண்டுபிடிப்பில் வந்த ஊசிகளும் ஒத்துழைத்தன. மூச்சு இழை பிரிந்தது. இந்தப் பத்து நாட்களாகப் பேச்சில்லை! என்றாலும் படிப்படியாகத் தெளிவு காணப்பட்டது. அகிலாண்டத்திற்கு உயிர் வந்தது. ‘விள்ளற் கறியவளின்’ கழலடிகளில் தலை பதித்துக் கிடந்தாள்.

6