பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 131

பாட்டின் பொருளாதார நிலைமைகளினால் நிர்ண யிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன’

என்று மார்க்ஸ் கூறுவது அறியத்தக்கது. எனவே எல்லா உயிர்களும், அனைத்துலகத்தின் மானிடவர்க்கமும் மகிழ்ந்து வாழ்வதற்குரியவாறு அமைவினை உண்டாக்கத் துணையா யிருப்பது நீதி. இதனைச் சமூக நீதி (Social lustice) என்பர். இந்த நீதியை ஒருவன் கேட்டுப் பெறுவதில்லை. இயல்பாகவே அவனுக்குக் கிடைப்பதே நீதி. இந்த உயர்ந்த நீதி உலகத்தின் நடைமுறை ஒழுக்கமாகுமானால் கலகம் ஒடுங்கும்; போர் ஒடுங்கும், மண்ணகம் விண்ணகமாகும். இத்தகைய நீதியை நிலை நாட்டுவதில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கைகோத்து நிற்பது களிப்பைத் தருகிறது.

மனித உரிமையை மதிக்கும் தத்துவங்கள்

சைவ சித்தாந்த நூல்களில் முடியுடை மன்னராட்சி பற்றிய விரிவான ஆய்வு இல்லை. அஃது அவர்கள் காலத்துத் தேவையாக அமையவில்லை. காரணம், கிராமங்களும் குடும்பங்களும் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தன; தன்னிறைவுடையனவாயிருந்தன. அன்றாட வாழ்க்கையில் அரசின் குறுக்கீடுகள் இல்லை. அரசுகள் பொது ஒழுங்கு, படைப்பாதுகாப்பு மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அதுமட்டுமின்றித் தமிழ்நாட்டு அரசுகள் முறை செய்து காப்பாற்றும் அரசுகளாக இருந்தமையினால் அரசைப் பற்றி அன்றாடம் எண்ணிப் பேசவேண்டிய சூழ்நிலை அன்று இல்லை. இன்றோ, அரசுகள் வளர்ந்து, அதிகாரத்தைப் பெருக்கிப் பெருக்கித் தனி மனிதனுடைய வாழ்க்கையில் கூட

42. கார்ல்மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1 பக்கம் 132