உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தி குன்றக்குடி அடிகளார்

அரசின் அதிகார வீச்சு தலை காட்டுகிறது. அதுவும் நம்முடைய நாட்டில் உள்ளார்ந்த செழுமை பெறாத மக்களாட்சி முறையும். சீரமைப்படுத்தப்படாத சமுதாய அமைப்பும் அரசின் அதிகாரப்பிடிப்பையே வலிமைப்படுத்தி யுள்ளன. மக்களின் வலிமை முடம்பட்டே போகின்றது. இது வளரும் நாட்டுக்கு நல்லதன்று. தனி மனித வாழ்க்கையில் அரசு குறுக்கிட்டபொழுதெல்லாம் நமது சமய ஆசிரியன் மார்கள் கனன்று எழுந்து கடிந்துள்ளனர். அப்பரடிகள், பல்லவப் பேரரசன் மகேந்திர வர்மனின் ஆட்சியை எதிர்த்துப்பாடிய,

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்,

நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம், ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்,

இன்பமே எந்நாளும் துன்பு மில்லை தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம் மலர்ச்சே வடியிணையே

குறுகினோமே!'

என்கிற பாடல் வரலாற்றுச் சிறப்புடையது. தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தனி மனிதர் வாழ்க்கையில் ஒரு அரசு தலையிட்ட வரலாறே இதுதான்். அரசன் மூர்க்கத்தனமாகத் துன்புறுத்துகிறான் ஆயினும் நீதி வெற்றி பெறுகிறது. மார்க்சு, புரட்சியைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு மனிதனின் குணங்கள் மாறும் வரைக்கும் வலிமை சான்ற ஆட்சி வேண்டுமென்கிறார். காலப் போக்கில் அரசே இல்லாத -

43. திருநாவுக்கரசர் - மறுமாற்றத் திருத்தாண்டகம் - 1