பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஜீ குன்றக்குடி அடிகளார்

ஆய அன்பர்தாம் அணிமதில்

சண்பையில் அமர்பெருந் திருத்தோணி நாயனார்க்கு நற்றிருப்பணி ஆயின.

நாளும் அன்பொடு செய்து மேய அத்திருத் தொண்டினில்

விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத் துரயகைத் திருத் தொண்டினில்

அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.

(பெரி. கனநாதர் - 2)

என்று பெரியபுராணம் பேசுகிறது.

எனவே திருக்கோயில், தொண்டு இயக்கத்தின் மையம் என்பதறிக. திருக்கோயிலைச் சார்ந்து வாழ்கிறவர்கள் வளமாக வாழத் துறை தோறும் வாயில் அமைத்து வழி செய்தது திருக்கோயிலேயாம்! -

உடல் ஊனமுறுதல் வருந்தத்தக்க ஒன்று! உடல் ஊனமுற்றோர் பக்கம் கனிந்த அன்பைக் காட்ட வேண்டும்! அவர்தம் வாழ்க்கைக்குரியன எல்லாம் செய்யப் பெற வேண்டும். இந்த உணர்வு திருக்கோயில் வளாகத்தில் அரும்பி மலர்ந்திருந்தது. திருவாமாத்துார்த் திருக்கோயிலில், கண் பார்வையிழந்தோர் 16 பேர் உண்டியும், உறையுளும் பெற்றுத் திருமுறை பயின்றனர்-ஒதினர் என்பதை அறிக. கண்ணிழந்த சுந்தரர்க்கு இடர்ப்பாடின்றி நடக்க ஊன்று கோல் கொடுத்துதவியது திருவெண்பாக்கத்துத் திருக்கோயில் வட்டம் என்பது ஒர்க. சமுதாயத்தில் பலவீனர்களாகிய உடல் ஊனமுற்றோர்க்குக் காப்பகமாகவும் திருக்கோயில் விளங்கி வருகிறது. - -