பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

  • திருக்கோயில் பூசனை எல்லாரும் செய்யலாமா? - ஒர் ஆய்வு

. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள செய்தி மிகவும் கவனத்துடன் சிந்தித்து முடிவு காண வேண்டிய ஒன்று. இன்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சைவத்திருமேனி கொண்டு எழுந்தருளிய குருமூர்த்திகளால் காணப்பெற்று, இன்றளவும் - சிவாகம நெறியையும், செந்தமிழ் நெறியையும் முறையே போற்றிப் பாதுகாத்து வரும் நமது ஆதீனத்தின் வழி வழிப் பொறுப்புகளுக்கு ஏற்பவும், வளர்ந்து வந்துள்ள இன்றைய சமுதாயத் தேவுை களுக்குத் தீர்வு காணத்தக்க வகையிலும், சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆய்வுக்குரிய அளவைகளை முடிவு செய்து கொண் டால்தான்் ஆய்வு செப்பமாகச் செய்ய இயலும். அப்போது

தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையைத் துறை வல்லுநர் குழுவிற்கு 22-11-1980இல் அளித்த அறிக்கை.