பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆலேக் கரும்பு பண்ணுகிருன் இறைவன் திருமுடிப்பட்டறையில் §G5 பெண் இருக்கிருள். கங்கை இல்லையா? அவளுக்காகத் தரன் இதை தயாராகிறது !. அதெல்லாம் சரி. நெருப்பிருக்கிற்து. தங்கம் இருக் கிறது, நகைக்காக் ஆசைப்ப்டும் பெண்ணிருக்கிருள் என் றெல்லாம் சொன்னரே, நகை செய்கிற் தட்டான் எங்கே? அவ்ன் இல்லாமல் இத்தனையையும் கொண்டு வந்து வைத் தால் அது பட்டறை ஆகுமா? நகைதான் செய்ய முடியுமா?" என்று அவசரப்பட்டுக் கேட்டுவிடாதீர்கள். இதே தட்டானும் இருக்கிருன். . அவன் வயசர்னவன். கூனல் விழுந்தவன். உடம்பு நரைத்துப் போயிற்று. அவன் முதுகைக் கூனிக்கொண்டு தங்கத்தை ஊதி நகை பண்ணுகிருன். இந்தத்துறையில் பலகாலம் பழகிக் கைராசியுள்ளவகைப் பார்த்துத்தான் அவனிடம் நகை செய்வர்கள். அந்தத் தட்டான் யார் தெரியுமா? இறைவன் சடை முடியில் இருக்கும் சந்திரன் தான். முழுச்சந்திரன் அல்ல பிறைதானே? ஆதலால் அது வளைந்துதானே இருக்கும்? வெளுப்பு நிறமும் வளைவும் கரைத்துக் கூன் விழுந்த கிழவனே கினப்பூட்டுகின்றன. கங்கைஅப் ப்ொன்செய்விக்கும் மின்ஒக்கும் பொன்செய் கிழக்கொல்லன். பொன் ைகையாகச் செய்கிற கிழட்டுத் தட்டானேக் கடைசியில் சொல்கிருர் குமரகுருபரர் இடத்தைக்காட்டின பிறகுதானே அதற்கு உடையவனக் காட்டவேண்டும்? இன்னும் தங்கம் தழலில் உருகியபடியே இருக்கிறது! கைஇன்னும் ஆண்பாடில்லை. அந்தப் பெண்ணும் பட்ட றையை விட்டுப் போனபாடும் இல்லை!