பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆலேக் கரும்பு அன்பு ஒன்றையே கருதி அவனுடைய பர்ணசாலேக்கு வந்து விருந்து உணவுகொண்டான். அவனுடைய எளி மைக்கும் கருணைக்கும் ஈடு ஏது ? பயங்கரச் சூழலிருந்து கவிஞருடைய உள்ளமென்னும் பறவை சிறகடித்துப் பறந்து கருடவாகனனுடைய திருமேனி எழிலிலும் இணையற்ற ஆற்றலிலும் கரையற்ற கருனேயிலும் உலாவியது. - - خيه கவிஞராதலின் அவருடைய கற்பனே கவி உருப் பெற்றது. இந்த இருவகை நிலையையும் இணைத்து ஒரு துதிக் கவியைப் பாடிவிட்டார். மாலேக்கு அரும்புபிறை புரைவாள் எயிற்றுநமன் வன்பாசம் விசஉடலம் ஆலேக் கரும்புபடும் முன்னேகண் முன்னேயுள் அரசோடும் வந்துஉதவுவாய்; வேலைக் கரும்புனித, இந்திராதி யர்க்குதல் விருந்திட்டு வந்துவிதுரன் சாலைக்கு அரும்புது விருந்தாம் - மருந்தே தடஞ்சோலை மலைஅழகனே. (மாலையிலே முளேக்கும் பிறையைப் போன்று ஒளிவீசும் கோரப் பல்லேயுடைய யமன் வலிய பாசத்தை வீச, உடம்பானது ஆலயிலே உள்ள கரும்பு படும் வேகனேயைப் படுவதற்கு முன்னே என் கண்முன்னலே கருடவாகனத்தோடு எழுந்தருளி வந்து எனக்கு அருட்செல்வத்தை உதவ வேண்டும்; சமுத்திரம் போன்ற கரிய நிறம் பெற்ற புனிதனே! இந்திரன் முதலிய தேவர் களுக்கு அமுதமாகிய நல்ல விருங்கை வழங்கி, அப்பால் விதுரன் சாலைக்கு வந்து பிறருக்குக் கிடைக்காத அரிய புதிய விருக்கின் கிைய அமுதம் போன்றவனே! விசாலமான சோலேமலையிலுள்ள அழகனே! . . . " மால்ேக்கு மாலையில். புரை ஒத்த வாள் - ஒளி. எயிறுபல். புள் அரசு கருடன். வேலே , கடல்ேப்போன்ற, மருந்து. அமுதம் . . . . இந்த அரிய பாட்டு அழகர் கலம்பகத்தில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/12&oldid=744366" இலிருந்து மீள்விக்கப்பட்டது