பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி வளர் காடு 9. என்ருல் கொடுக்கவேண்டும். தும்பிக்கையால் யானே வாங்கிக்கொள்கிறதே ஒழியக் கொடுக்கிறது இல்லை. இந்தக் களிருே ஐந்து கைகளே உடையது. தன்னேச் சேர்ந்தவர்களுக்கு வேண்டிய பொருள்களேயெல்லாம் வழங்குவதற்கு அமைந்த திருக்கரங்கள் அவை. நான்கு கரங்கள் நம் கைகளைப் போன்றவை. ஒன்று தும்பிக் கை; முகத்திலிருந்து நீண்ட துதிக்கை. இந்தத் தெய்வக் களிறு, மற்றத் தேவர்களெல்லாம் கான்கு கரங்கள் படைத்திருக்க, தான் மாத்திரம் தனியே நீண்ட துதிக்கை ஒன்றையும் படைத்திருக்கிறது. இந்தக் களிறு அன்பர்களின் மனமாகிய காட்டிலே வந்து விளே யாடத் திருவுள்ளம் கொள்கிறது. 'பாழும் ஆங்காரமென் லும் மதயானே உலாவும் காடாயிற்றே!" என்று நாம் பயப் படுகிருேம். ஆனால் இந்த யானே பயப்படுமா? நமக்கு ஏற்ற இடம் காடுதானே? தேவ லோகத்தில் உள்ள கற்பகக் காட்டில் உலாவலாம்; ஆனல் அது நமக்கு வேண்டாம் பூவுலகத்தில் பல அரணியங்கள் உண்டு: அவற்றிலும் நம்முடைய நாட்டம் செல்லவில்லை. கற்பகக் காட்டில் தேவர்கள் சுகமாக வாழ்கிருர்கள். அங்கே நமக்கு வேலை இல்லை. பூவுலகக் காட்டில் வேடர்களும் மற்றவர்களும் புகுந்து வனவிலங்குகளை அழிக்கிருர்கள். அங்கும் நமக்கு வேலே இல்லை.வேறுயாரும் புகுவதற்கு அஞ்சும் நம்முடைய அன்பர்களின் உள்ளமாகிய காடுதான் மைக்கு ஏற்ற இடம். அங்கே நாம் போனல் அங்குள்ள விலங்குகள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும்"என்ற அருளுள்ளத் தோடு இந்தக் களிறு வருகிறது. - அன்பருடைய நெஞ்சமாகிய காட்டில் இப்போது தன் தோள்கள் கான்கோடு கை ஒன்றும் மிகுதியாகக் கொண்ட விநாயகக் களிறு விளையாடுகிறது. வளர்கிறது. என்ன ஆச்சரியம்! இப்போது நெஞ்சம் காடாகவே இருக்கிறது: