பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருமஞ்சனம் உலகமெல்லாம் தன் திருவுருவாகப் படைத்த பெரு, மாட்டியாகிய பராசக்தி தன்னுடைய சிங்காதனத்தில் வீற்றிருந்தாள். மகிடாசுரனேயும் பண்டாசுரன் முதலிய வர்களேயும் அழித்துத் தேவர்களுக்கு இன்பம் நல்கிய பெரு மிதமும் கருணையும் பொங்க அம்பிகை புன்முறுவல் பூத்த திருமுகத்தோடு அமர்ந்திருந்தாள். இந்திராதி தேவர் களெல்லாம் அப் பெருமாட்டியின் திருவருள் இல்லா விட்டால் தாங்கள் இருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும் என்பதை உணர்ந்து பராசக்தியைப் பாராட்டிக்கொண்டே இருக்கிருர்கள். அன்னேயினுடைய அருட்பார்வை பெற்றுக் காலனேயும் வென்ற முனி புங்க வர்கள் அப் பெருமாட்டியின் பெருங் கருணைத் திறத்தை கினேந்து கினேந்து உருகிப் புளகம் போர்த்து ஆனந்தக் கூத்தாடுகிருர்கள், பூவுலகில் லோகமாதாவின் மந்திரங்களே ஜபம் செய்தும் திருவுருவத்தைத் தியானித்தும் நீசக்ரத்தில் அம்பிகையை மேவச் செய்து பூசித்தும் அபிடேக ஆராதன செய்தும் அன்பர்கள் வழிபடுகிருர்கள். ஆருயிர்களே யெல்லாம் குழந்தைகளாகப் படைத்த அன்னே தேவரும் முனிவரும் மனிதரும் இவ்வாறு பாராட்டியும் போற்றியும் வழிபட்டு வருவதைக் கண்டு மகிழ்ந்து வீற்றிருக்கிருள். இந்திரலோகத்தில் திடீரென்று அமரர் அரசனுக்கு, ஒரு கினேவு உண்டாயிற்று. 'கம்முடைய அன்னைக்குத் தேவர்களெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஆராதனையை கடத்தவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அம்பிகையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/17&oldid=744379" இலிருந்து மீள்விக்கப்பட்டது