பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருமஞ்சனம் 15 என்று சொல்லிச் சொல்லி வருணன் அபிடேக நீரையும் பிற பொருள்களேயும் எடுத்து எடுத்துத் தந்தான். திரு மஞ்சனமாயிற்று. அமரமடந்தையர் உடனிருந்து அம்பி கையின் குறிப்பறிந்து பணி செய்தனர். இந்திராணி இந்திரனுக்கு அருகில் இருந்து வேண்டியதைச் செய்தாள். அபிடேகம் ஆயிற்று. அம்பிகையின் சேடிகளது உதவி கொண்டு இந்திராணி முதலியோர் அம்பிகையை அலங்கரித்தார்கள். பிறகு அர்ச்சனை தொடங்கியது. து.ாபதி நைவேத்தியங்கள் ஆயின. வேத கானமும் பிற தோத்திரங்களும் நடைபெற்றன. தும்புரு நாரதர் யாழ் வாசித்தனர். அம்பிகையின் அக்தரங்க பக்தராகிய துர் வாச முனிவர் இவ்வளவையும் பார்த்துக்கொண்டு ஒரு தனியிடத்தில் இருந்தார். பூசை ஒருவாறு நிறைவெய்தியது. அம்பிகை யாவருக்கும் விடைகொடுத்து அனுப்பினள். இந்திரன் உடம்பையே மறந்து ஆனந்தக் கடலில் ஆழ்க் தான். தன் அரண்மனை சென்ருன் 'இத்தனே அற்புதமான பூசையை நம்மாலன்றி வேறு யாரால் செய்ய முடியும்?" என்ற செருக்கு அவன் உள்ளத்தில் மீதுர்ந்து நின்றது. தனியே இருந்த துர்வாசர், அமரர் கூட்டம் எல்லாம் போனவுடன் அம்பிகையை அணுகி அவள் திருவடியில் விழுந்து எழுந்தார். அப் பெருமாட்டியின் திருமுக மண்ட லத்தில் இயற்கையாக உள்ள நிலா முறுவலே அப்போது அவர் காணவில்லை. அத்தகைய கிலேயில் அவர் அம்பி கையைத் தரிசித்ததே இல்லை. அவர் உள்ளத்தில் இன்ன தென்று சொல்ல முடியாத வேதனே உண்டாயிற்று. "தாயே, இன்று கடந்த பூசையில் உன்னுடைய திரு வுள்ளம் பேருவகையை அடைந்திருக்கவேண்டுமே தேவர் க்ளுக்கும் இந்த நல்ல காரியத்தைச் செய்ய அறிவு உண் டாயிற்றே! உன் திருவருளே என்னவென்று சொல்வேன்' என்று பணிவாகச் சொன்னர்.