பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைக் கும்பிடு 33 இருவிதத் திருக் கோலங்கள் அவை. இருவரும் முயலகனை மிதித்து அவனல் உயிர்களுக்கு வரும் அச்சத்தைப் போக்கு கின்றனர். கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே கதிக்கான மெளன.வடிவே! கருதரிய சிற்சபையில் ஆனந்த நித்தமிடு கருணு கரக்கடவுளே.' இவ்வாறு மூர்த்தங்களாகிய திருவடிவங்களேயும், உலகில் உள்ள பொருள்களாகிய வடிவங்களையும், தத்து வங்களாகிய உருவங்களேயும் கொண்ட இறைவன் கருணக்கு ஆகரமாக இருப்பிடமாக இருக்கிருன். அந்தக் கருணையினுல்தான் வடிவில்லாத அவன் வடிவை எடுத்து வருகிருன் ஆலுைம் அவன் வடிவிறந்தவன்; எல்லா வடி வங்களாகவும் இருப்பவன். கண்ணுக்குப் புலப்படும் மலராக இருப்பான். கண்ணுக்குப் புலப்படாமல் கருத் தூடே நிற்பான். அவனேக் கண்டு கும்பிடும் வகை பல உண்டு. தாயுமானவர் எங்கும் அவனேக் காணும் கண்ணே உடையவர். அதல்ை அவர் மலரைப் பறிக்கவில்லே கை குவித்துக் கும்பிடவில்லை. எப்போதும் அப்படி இருந்தார் என்று நினைக்கக்கூடாது. ஒரு சமயத்தில் அப்படி ஒரு வகையான மனநிலை இருந்தது. அதைப் புரிந்துகொள்வதே ஒரு பாக்கியம். ★ முழுக்கும்பிடு போடத் தெரியாத நாம் அரைக்கும்பிடு போட்டாலும் இறைவன் ஏற்றுக்கொள்வான்; காற் கும்பிடு போட்டாலும் பெற்று அருள் செய்வான். இப்போது தாயுமானவர் பாட்டு முழுவதையும் பார்த்து இன்புறலாம். 3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/39&oldid=744402" இலிருந்து மீள்விக்கப்பட்டது